‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ மே 4ம் தேதி ரிலீஸ்..!
`ஹரஹர மஹாதேவகி' படத்தை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் அடுத்ததாக ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, `கஜினிகாந்த்' உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார்.
இதில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நாயகன், நாயகியாக கவுதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா நடிக்கின்றனர். அடல்ட் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகும் இந்த படத்தில் ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வந்தது. தற்போது இப்படத்தை மே 4ம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்....









