செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

சினி நிகழ்வுகள்

‘பத்மாவத்’ எதிர்ப்பு ; பா.ஜ.க.,  ஒட்டுமொத்த நாட்டையும் கொழுந்து விட்டு எரிய வைக்கிறது- ராகுல்காந்தி

‘பத்மாவத்’ எதிர்ப்பு ; பா.ஜ.க., ஒட்டுமொத்த நாட்டையும் கொழுந்து விட்டு எரிய வைக்கிறது- ராகுல்காந்தி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜபுத்ர ராணி பத்மாவதியின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம், `பத்மாவத்'. இந்த திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், தங்கள் மாநிலங்களில் அந்தப் படத்தை வெளியிட முடியாது' என்று மத்தியப்பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் அரசுகள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தன. இதனிடையே, 'பத்மாவத்' திரைப்படத்துக்குத் தடை விதிக்க முடியாது' என்று சுப்ரீம் கோர்ட்  உத்தரவு பிறப்பித்தது. பல்வேறு தடைகளை உடைத்து `பத்மாவத்' திரைப்படம் இன்று இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளிவருகிறது. இதனை எதிர்த்து மத்தியப்பிரதேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. பத்மாவத் படத்திற்கு எதிரான போராட்டத்தின் போது அரியானா மாநிலம், குர்கிராமில் பள்ளி குழந்தைகளை ஏற...
160 கோடிக்கு காப்பீடு… தீபிகாபடுகோனேவுக்கு 12 கோடி சம்பளம் – பத்மாவத் பரபரப்பு

160 கோடிக்கு காப்பீடு… தீபிகாபடுகோனேவுக்கு 12 கோடி சம்பளம் – பத்மாவத் பரபரப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
சர்சையில் சிக்கிய ‘பத்மாவத்’ படம் இந்தியா முழுவதும் நேற்று திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் ராஜபுத்திர வம்சத்தினர் தெய்வமாக வழிபடும் சித்தூர் ராணி பத்மினி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடித்து இருக்கிறார். வாள்சண்டை, குதிரை சவாரி பயிற்சிகள் எடுத்து இதில் அவர் நடித்துள்ளார். சரித்திர கால ஆடைகள், ஆபரணங்கள் அணிந்து ராணியாகவே மாறி இருந்தார். படம் பார்த்தவர்கள் அவரது நடிப்பை பாராட்டி வருகிறார்கள். ஆனால் ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவர்கள் எதிர்க்கிறார்கள். தீபிகா படுகோனே தலைக்கு பரிசுகள் அறிவித்தனர். இதனால் போலீஸ் பாதுகாப்புடன் அவர் வெளியே செல்கிறார். சமீபத்தில் மும்பையில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று படம் சிக்கல் இல்லாமல் வெளியாக வேண்டி வழிபட்டபோதும் போலீசார் பாதுகாப்புக்காக கூடவே வந்தார்கள். தற்போது படம் வெளியான பிறகும் தீபிகா படுகோனேவுக்கு மிரட்டல்கள் தொடர்கின்றன...
விருது அறிவித்திருப்பது தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் பெருமை: இளையராஜா

விருது அறிவித்திருப்பது தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் பெருமை: இளையராஜா

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டள்ளது. இளையராஜாவிற்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு நடிகர்கள் ரஜினி, கமல், விஷால் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விருது பெறுவது பெற்றி இளையராஜா கூறும்போது, ‘பத்ம விபூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் மத்திய அரசு என்னை கௌரவித்ததாக கருதவில்லை என்றும் தமிழகத்தையும், தமிழ் மக்களையும் கௌரவித்ததாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்....
மானம்,சூடு,சுரனை இல்லாத ரோலில் கவுதம்கார்த்திக் – படவிழாவில் இயக்குனர் கலாட்டா

மானம்,சூடு,சுரனை இல்லாத ரோலில் கவுதம்கார்த்திக் – படவிழாவில் இயக்குனர் கலாட்டா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
7சி எண்டர்டெயின்மெண்ட் ஆறுமுககுமார் மற்றும் அம்மே நாராயணா என்டர்டைன்மென்ட் சார்பில் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுக குமார் எழுதி இயக்கி இருக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிட, வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குனர் ஆறுமுக குமார் பேசும்போது, ‘இந்த கதையின் மீதும், எங்கள் மீதும் நம்பிக்கை வைத்து ஃபைனான்ஸ் செய்திருக்கிறார்கள் அம்மே நாராயணா எண்டர்டெயின்மெண்ட். நான் இயல்பாக பழகுவது ஒரு சாதாரண விஷயம். ஆனால் விஸ்வரூப வளர்ச்சி அடைந்திருக்கும் விஜய் சேதுபதி இப்போதும் அதே மாதிரி பழகுவது  தான் ரொம்ப பெரி...
காயத்ரி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்: விஜய் சேதுபதி

காயத்ரி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்: விஜய் சேதுபதி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
7சி எண்டர்டெயின்மெண்ட் ஆறுமுககுமார் மற்றும் அம்மே நாராயணா என்டர்டைன்மென்ட் சார்பில் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுக குமார் எழுதி இயக்கி இருக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிட, வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி பேசும்போது, ‘ஒரு தெளிந்த நீரோடை போல மிகவும் தெளிவானவர் தான் இயக்குனர் ஆறுமுக குமார். ஆள் பார்த்து பழகாமல், எல்லோரையும் சமமாக நினைத்து பழகக் கூடியவர். அவர் முதல் படத்திலேயே தயாரித்து இயக்கியிருக்கிறார். தன் திறமை மேல் நம்பிக்கை வைத்து உழைக்கும் ஹீரோ தான் கௌதம் கார்த்திக்...
சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான ராமின் பேரன்பு..!

சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான ராமின் பேரன்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
`தரமணி' படத்தை தொடர்ந்து, ராம் அடுத்ததாக `பேரன்பு' படத்தை இயக்கி வருகிறார். இதில் கேரளா சூப்பர் ஸ்டார் மம்முட்டி நாயகனாக நடிக்கிறார். சரத்குமார், அஞ்சலி, அஞ்சலி அமீர், சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, தங்கமீன்கள் சாதனா, லிவிங்ஸ்டன், சுராஜ், சித்திக், அருள்தாஸ் உள்பட பலரும் நடிக்கும் இந்த படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. பி.எல்.தேனப்பன் தயாரித்துள்ள இந்த படம் நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வாகியுள்ளதாக இயக்குநர் ராம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராம் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, `47-வது ரோட்டர்டாம் (நெதர்லாந்து) சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு திரைப்படம் தேர்வாகியுள்ளது. உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. பேரன்போடு, ராம்.'...
பத்ம விபூஷண் விருது பெற்ற இசைஞானிக்கு ரஜினி- கமல்-விஷால் வாழ்த்து

பத்ம விபூஷண் விருது பெற்ற இசைஞானிக்கு ரஜினி- கமல்-விஷால் வாழ்த்து

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பத்ம விபூஷண் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடிகர்கள் ரஜினிகாந்த் போனிலும், கமல்ஹாசன், விஷால் ஆகியோர் டுவிட்டரிலும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கமல் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘எனக்கு மூத்தவர் என் இளையராஜாவுக்கு விருது. விருதுக்கான தகுதியை இவர் இளமையிலேயே பெற்றிருந்தார். தாமதமாய் வந்த பெருமையை ராஜா போல் ரசிகரும் மன்னிப்பர். விருதும் நாடும் தமிழகமும் பெருமை கொள்கிறது’ என்று பதிவு செய்திருக்கிறார். விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நாட்டின் 2-வது உயரிய குடிமகனுக்கு வழங்கப்படும் பத்ம வ...
இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிப்பு

இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பாரத் ரத்னா விருதுக்கு அடுத்த படியாக நாட்டின் 2-வது உயரிய குடிமகனுக்கு வழங்கப்படும் பத்ம விபூஷன் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு இளையராஜாவுக்கு பத்ம பூஷன் விருது அளிக்கப்பட்டது. இதுதவிர மதுரை தியாகராஜர் கல்லூரியின் துறை தலைவர் பேராசிரியர் ராஜகோபாலன் வாசுதேவன், தமிழக நாட்டுப்புற கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், கோவையை சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஞானம்மாள் (98), அரவிந்த் குப்தா, லட்சுமி குட்டி (கேரளா), சுபசினி மிஸ்திரி (மேற்குவங்கம்), பாஜு ஷ்யாம், சுதன்ஷு பிஸ்வாஸ், சுலாகட்டி நரசம்...
’நாளை நமதே’ ஸ்லோகனுடன்  கிராமங்களை தத்தெடுக்க கமல்ஹாசன் திட்டம்..!

’நாளை நமதே’ ஸ்லோகனுடன் கிராமங்களை தத்தெடுக்க கமல்ஹாசன் திட்டம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
கிராமங்களை தத்து எடுத்து, அனைத்து வித வசதிகளையும் செய்து கொடுக்க நடிகர் கமல்ஹாசன் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வார இதழில் எழுதி வரும் கட்டுரையில் கூறி இருப்பதாவது:- ‘மக்களைக் களத்தில் சந்திக்க, வரும் பிப்ரவரி 21-ந்தேதி பயணம் கிளம்புகிறேன்’ என்று சொல்லியிருந்தேன். இந்தப் பயணத் திட்டத்துக்கு ஒரு பெயர் வைத்துள்ளோம். ‘நாளை நமதே’. ஆம், அந்தப் பயணத்திட்டத்துக்கு நாங்கள் வைத்துள்ள பெயர் இது தான். அவர் ஞாபகம் வந்தாலும் பரவாயில்லை, அவை நல்ல ஞாபகங்கள் என்பதால் இந்தப் பெயரை வைத்துள்ளோம். நான் ஏதோ சக்கரத்தைப் புதிதாக வடிவமைத்தவன் போல் பேசுவதாக நினைக்க வேண்டாம். ஏற்கெனவே அதைக் கண்டுபிடித்துச் சுழலவிட்டுக் கொண்டிருந்தவர்களிடம் போய்ப் பாடம் கற்றேன். லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப்புகளுக்குச் சென்று அவர்களின் நற்பணிகள் என்னென்ன என்று தெரிந்து கொண்டு அதை அப்படியே நகலெடு...
பத்மாவத் பட ரிலீஸ் கொந்தளிப்பு… அரசு பஸ் எரிப்பு திரையிட தியேட்டர்கள் மறுப்பு

பத்மாவத் பட ரிலீஸ் கொந்தளிப்பு… அரசு பஸ் எரிப்பு திரையிட தியேட்டர்கள் மறுப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
பத்மாவத் படத்தை திரையிடலாம் என சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவையும் மீறி பத்மாவத் படத்துக்கு பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. குறிப்பாக, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. பத்மாவத் படம் திரையிட இருந்த தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தியேட்டர்களுக்கு அருகில் சாலையோரம் இருந்த பெட்டிக்கடைகள், மால்களுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கி தீவைத்தனர். இதனால், சேதம் ஏற்படுத்திய கும்பலை விரட்ட போலீசார் வாகனத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, அங்கு இருந்தவர்கள்  கலைந்து சென்றனர். இந்த வன்முறை தொடர்பாக ஏராளமான நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். வன்முறை நீடிப்பதால், அகமதாபாத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இன்று மாலை குருகி...