சனிக்கிழமை, ஜூன் 6
Shadow

சினி நிகழ்வுகள்

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி – அடிமைப் பெண், ஆயிரத்தில் ஒருவன் திரையீடு

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி – அடிமைப் பெண், ஆயிரத்தில் ஒருவன் திரையீடு

சினி நிகழ்வுகள், செய்திகள்
    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவினால் தள்ளிவைக்கப்பட்ட சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ‘அடிமைப் பெண்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகியப் படங்கள் சிறப்பு பிரிவின்கீழ் திரையிடப்படுகின்றன. தமிழ்நாடு அரசின் ஆதரவுடன் தமிழ் சினிமா தயாரிப்பு தொடர்பான பல சங்கங்களை சேர்ந்த ’இன்டோ சினி அப்ரிசிசேஷன்’ என்ற அமைப்பு கடந்த ஐந்தாண்டுகளாக ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் சர்வதேச திரைப்பட விழாவை சென்னை நகரில் நடத்தி வருகிறது. அவ்வகையில், கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதியில் இருந்து 22-ம் தேதிவரை சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 5-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, சென்னை சர்வதேச திரைப்பட விழா தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, ஜனவரி 5 முதல் 12 வரை ஒருவார காலத்துக்கு இந்த விழா ந...
ஜேசுதாசுக்கு பாத பூஜை செய்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

ஜேசுதாசுக்கு பாத பூஜை செய்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

சினி நிகழ்வுகள், செய்திகள்
சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட ஆரம்பித்து 50 வருடங்கள் ஆகின்றன. இதையொட்டி, அவர் உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தார். கனடா, மலேசியா, ரஷியா, இலங்கை, துபாய், அமெரிக்கா ஆகிய நாடுகளில் அவர் இசை நிகழ்ச்சிகள் நடத்திவிட்டு சென்னை திரும்பினார். நேற்று சென்னையில் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பின்னணி பாடகர் ஜேசுதாசையும், அவரது மனைவி பிரபாவையும் மேடைக்கு அழைத்து அவர்களுக்கு, எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், அவரது மனைவி சாவித்ரியும் பாத பூஜை செய்து, கால்களில் விழுந்து வணங்கினார்கள். பின்னர் அவர், நிருபர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 50 வருடங்கள் என்பது சாதனை அல்ல. ஜேசுதாஸ் அண்ணா 55 வருடங்களாக பாடி வருகிறார். ஜானகி, சுசிலா, லதா மங்கேஸ்கர் போன்றவர்கள் 75 வருடங்களுக்கு மேல் பாடி வருகிறார்கள். என் குரு ஜேசுதாஸ். அவருக்கு காணிக்கை செலுத்த...

60-வது பிறந்தநாள் : பிரபுவை வாழ்த்திய ரஜினி

சினி நிகழ்வுகள்
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இளைய மகனும், நடிகருமான பிரபுவுக்கு வருகிற டிசம்பர் 27-ந் தேதி பிறந்தநாள். இந்த பிறந்தநாளோடு அவருக்கு 60 வயது ஆகிறது. இந்நிலையில், பிரபுவின் பிறந்தநாளையொட்டி இன்று பிரபுவை அவரது அன்னை இல்லத்தில் ரஜினி நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். ரஜினி நேரில் வாழ்த்தியது பிரபுவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த சந்திப்பின் போது, நடிகர் விக்ரம் பிரபு மற்றும் பிரபு குடும்பத்தை சேர்ந்த அனைவரும் உடனிருந்தனர். ரஜினியும் பிரபுவும் ‘குரு சிஷ்யன்’, ‘தர்மத்தின் தலைவன்’, ‘சந்திரமுகி’, ‘குசேலன்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். சினிமாவையும் தாண்டி, ரஜினியும், பிரபுவும் நிஜ வாழ்க்கையிலும் உடன்பிறவா சகோதரர்களாக இருந்து வருகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இருப்பினும், தன்னுடைய பிறந்தநாளையொட்டி ரஜினி நேரில் வந்து வாழ்த்தியது பிர...
சமுத்திரக்கனி படத்தில் செளந்தரராஜா!

சமுத்திரக்கனி படத்தில் செளந்தரராஜா!

சினி நிகழ்வுகள், செய்திகள்
சமுத்திரக்கனி படத்தில் செளந்தரராஜா! “அப்பா” படத்திற்கு பின் சமுத்திரக்கனி தயாரித்து, இயக்கி நடிக்கும் படம், “தொண்டன்”. தொண்டன் படத்தில் சமுத்திரக்கனி, விக்ராந்த் உடன் சௌந்தரராஜாவும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சசிகுமார் நடித்து, அவரது பட்டறையில் இருந்து வந்த எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் வெளிவந்த, சுந்தரபாண்டியன் படம் தான், சௌந்தரராஜாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது. மீண்டும் தன்னுடைய தாய் குடும்பத்தின் வழிகாட்டியாகவும் தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்பாளியாகவும் இருக்கிற இயக்குநர் சமுத்திரக்கனி படத்தில் நடிப்பது, தமிழ் சினிமாவில் தனக்கு நல்ல பெயரோடு இன்னும் பெரிய அங்கீகாரத்தையும் பெற்றுத்தரும் என்ற மகிழ்ச்சியில் இருக்கிறார், சௌந்தரராஜா.   Actor Soundararaja in Director Samuthirakani’s next! After the movie “APPA”, Director Samuthirakani, is all set to p...
ஆட்டோக்களை திரையரங்கிற்குள் அனுமதிக்க வேண்டும் நடிகர் விஷால் பேச்சு

ஆட்டோக்களை திரையரங்கிற்குள் அனுமதிக்க வேண்டும் நடிகர் விஷால் பேச்சு

சினி நிகழ்வுகள், செய்திகள்
ஆட்டோக்களை திரையரங்கிற்குள் அனுமதிக்க வேண்டும்                                         நடிகர் விஷால் பேச்சு ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது  விஷால் நடிக்கும்    கத்திசண்டை படத்தை  தயாரித்து வருகிறார். படம் வருகிற 23 ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதிபாபு நடிக்கிறார் மற்றும் சௌந்தர்ராஜன், மதன்பாப், தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், சின்னி ஜெயயந்த், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள்  நடித்துள்ளனர். இந்த படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் விஷால் பேசியதாவது... முன்பெல்லாம் திரையரங்குகளில் அதிகமாக ஆடோக...
டாப்சி’ தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் மன்சூர் அலிகான்

டாப்சி’ தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் மன்சூர் அலிகான்

சினி நிகழ்வுகள், செய்திகள்
‘பெப்சி’ அமைப்புக்கு மாற்றாக சில ஆண்டுகளுக்கு முன்பு மன்சூர் அலிகான் தொடங்கிய ‘டாப்சி’ அமைப்பின் தலைவர் பதவியை உதறினார் மன்சூர். தமிழ் சினிமாவின் படப்பிடிப்புகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் ‘பெப்சி’ என்ற கூட்டமைப்பின் மூலம் செயல்பட்டு வந்தனர். பெப்சி அமைப்பினரின் ஆதரவு இல்லாமல் எந்த பெரிய நடிகரின் படமும் படபிடிப்புகளை நடத்த முடியாத சூழல் நிலவி வந்தது. இதன் மூலம் சிறு பட தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர். இந்த சூழலில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர், தயாரிப்பாளர் மன்சூர் அலிகான் ‘அதிரடி’ என்ற படத்தை தொடங்கினார். அப்போது ‘பெப்சி’ தொழிலாளர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மன்சூர் அலிகான் தலைமையில் ‘டாப்சி’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. சுமார் 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அதில் உறுப்பினகளாக இருக்கிறார்கள். இந்த நிலையில், சென்னையில் நடிகர் மன்சூர் அலிகான் திடீரென ஒரு அறிக்...
Thondan Movie Team Paid Tribute To K Balachander Photos

Thondan Movie Team Paid Tribute To K Balachander Photos

சினி நிகழ்வுகள், செய்திகள்
Please Find Below Press Release and Attached Stills Of Thondan Movie Team Paid Tribute To Iyakunar Sigaram K Balachander On 2nd Year Memorial Anniversary At Thondan Shooting Spot. இயக்குநர் சமுத்திரக்கனி அவர்கள் தயாரித்து இயக்கும் "தொண்டன்" படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களுக்கு இன்று இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி.  திரு சமுத்திரக்கனி அவர்கள் இயக்குநர் சிகரம் திருஉருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். படப்பிடிப்பு குழுவினரும் மலர் தூவி மரியாதை செய்தனர்....