செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

விமர்சனம்

‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ விமர்சனம்

‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ விமர்சனம்

விமர்சனம்
சென்னையில் டிராவல்ஸ் கம்பெனியில் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் பார்த்திபன். இவருக்கு ஒருநாள் வெளிநாட்டில் இருந்து வரும் சாந்தனுவின் அறிமுகம் கிடைக்கிறது. சாந்தனுவை பற்றி நன்கு தெரிந்திருக்கும் பார்த்திபன், அவரை தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பங்களாவில் தங்க வைக்கிறார். சாந்தனுவும் பார்த்திபனின் பேச்சில் மயங்கி, அவர் சொல்லும் இடத்திலேயே தங்க முடிவு செய்கிறார். அந்த பங்களாவில் பணிபுரியும் பார்வதி நாயரை பார்த்தவுடனே சாந்தனுவுக்குள் ஒருவித ஈர்ப்பு வந்துவிடுகிறது. அவளும் சாந்தனுவிடம் நெருங்கி பழக ஆரம்பிக்கிறாள். ஒருகட்டத்தில் பார்த்திபனின் மனைவிதான் பார்வதி நாயர் என்பது சாந்தனுவுக்கு தெரிய வருகிறது. பார்த்திபனின் வயதுக்கும், பார்வதி நாயரின் வயதுக்கும் ஒத்துப்போகாத நிலையில், இந்த திருமணம் எப்படி நடந்தது? என்று சாந்தனு கேட்கையில், அதற்கு பார்த்திபன், தான் சிறுவயதிலிருந்தே பார்வதி நாயர...
பைரவா விமர்சனம்

பைரவா விமர்சனம்

விமர்சனம்
ஒய்.ஜி.மகேந்திரன் மேனேஜராக பணிபுரியும் தனியார் வங்கியில், வராத கடன் தொகையை வசூலித்து கொடுப்பவராக பணிபுரிந்து வருபவர்தான் விஜய். இவருடன் சதீஷும் சேர்ந்து அதே பணியை செய்து வருகிறார். ஒய்.ஜி.மகேந்திரன் சிபாரிசின் பேரில் வங்கியில் வாங்கிய ரூ.64 லட்சம் பணத்தை மைம் கோபி அந்த பணத்தை திருப்புக்கொடுக்க முடியாது என்று அவரை ஏமாற்றி விடுகிறார். இதனால் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு பெரிய சிக்கல் ஏற்படுகிறது. அவரது மகளின் திருமணமும் நடக்கவுள்ளதால், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண விஜய்யின் உதவியை நாடுகிறார். விஜய்யும் மைம் கோபியை அடித்து துவம்சம் செய்து ஒய்.ஜி.மகேந்திரனுக்கு வரவேண்டிய பணத்தை மீட்டு கொடுக்கிறார். அதன்பின்னர், ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் திருமணம் நடக்கிறது. அந்த திருமணத்திற்கு மணப்பெண்ணின் தோழியான கீர்த்தி சுரேஷ் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு வருகிறாள். கீர்த்தி சுரேஷை பார்த்ததும் அவள்மீது காதல்...
மோ விமர்சனம்

மோ விமர்சனம்

விமர்சனம்
நாயகன் சுரேஷ் ரவி மற்றும் அவரது நண்பர்களான ரமேஷ் திலக், தர்புகா சிவா ஆகியோர் இணைந்து நூதனமான முறையில் மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இவர்கள் சினிமாவில் துணை நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு முனிஸ்காந்தை வைத்து பேய் போல் மேக்கப் போட்டு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உலவ விடுகின்றனர். பின்னர், அங்கு பேய் இருப்பதாகவும் அதை விரட்டுவதாகவும் கூறி அந்த அடுக்குமாடி குடியிருப்பின் செகரட்டரியான செல்வாவை ஏமாற்றி பணம் பறித்து வருகிறார்கள். ஒருகட்டத்தில் சுரேஷ் ரவி மற்றும் அவர்கள் கூட்டாளிகளின் நாடகம் செல்வாவுக்கு தெரிய வருகிறது. இதனால், அவர் இவர்களை போலீசில் மாட்டிவிடப் போவதாக கூற, அவர்களோ பயந்து நடுங்குகிறார்கள். அவர்களின் பயத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட செல்வா, தனக்கு தொழில்முறை போட்டியாளராக இருக்கும் மைம் கோபி வாங்கவிருக்கும் பாழடைந்த பள்ளியில் பேய் இருப்பதாக கூறி, அந்த ப...
மியாவ் விமர்சனம்

மியாவ் விமர்சனம்

விமர்சனம்
ராஜா, சஞ்சய் மிக்கி, ஹேடன், குமார் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கும் இவர்கள் நான்கு பேரும் பெரிய பணக்காரர்கள் என்பதால் தினமும் குடியும், கும்மாளமுமாக இருக்கிறார்கள். அதேநேரத்தில் அந்த குடியிருப்பில் தங்கியிருக்கும் பெண்களை கேலி, கிண்டல் செய்வதையும் வாடிக்கையாக வைத்து இருக்கிறார்கள். இந்நிலையில், அதே குடியிருப்பில் வசிக்கும் நாயகி ஊர்மிளா காயத்ரியை இவர்கள் கிண்டல் செய்ய, அவள் நண்பர்களில் ஒருவரை அடித்து விடுகிறாள். இதனால், நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஊர்மிளாவை பழிவாங்க துடிக்கிறார்கள். அன்றிலிருந்து நண்பர்களில் ஒருவன் திடீரென கொல்லப்படுகிறார். அந்த கொலையை செய்தது ஒரு பூனை என்று அந்த குடியிருப்பில் உள்ளவர்கள் அனைவரும் நம்புகிறார்கள். ஆனால், கொல்லப்பட்டவனின் நண்பர்களோ இதற்கு ஊர்மிளாதான் காரணம் என்று அவள்மீது பழியை போடுகிறார்கள். இந்த கொலை விசாரணை போல...
துருவங்கள் 16 விமர்சனம்

துருவங்கள் 16 விமர்சனம்

விமர்சனம்
ரகுமான் கோயம்புத்தூரில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். காலையில் இவர் ஸ்டேஷனுக்கு வந்தவுடன் ரோட்டில் ஒருவன் துப்பாக்கியால் சுட்ட நிலையில் கிடப்பதாக தகவல் வருகிறது. அதேநேரத்தில் அந்த கொலை நடந்த ஏரியாவில் உள்ள ஒரு வீட்டில் ரத்தக்கறை இருப்பதாகவும், அந்த வீட்டில் உள்ள பெண்ணை காணவில்லை என்றும் இவருக்கு தகவல் வருகிறது. துப்பாக்கியால் சுடப்பட்ட நபர் யார்? அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்துகொண்டாரா? காணாமல் போனதாக கூறப்படும் பெண் யார்? அவள் உண்மையிலேயே காணாமல் போனாளா? என்பது குறித்து விசாரிக்க களமிறங்கும் ரகுமானிடம், அதே ஸ்டேஷனில் புதிதாக சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் இந்த சம்பவத்தை பற்றிய விவரங்களை ஆர்வத்துடன் சொல்கிறார். இந்த பிரச்சினையில் அவர் தனக்கு உறுதுணையாக இருப்பார் என்று எண்ணிய ரகுமான், அவரை தன்னுடன் அழைத்துக் கொண்டு, இந்த சம்பவங்களை பற்றிய விசாரணையில் இறங்குகிறார். இறுதியில், இ...
பலே வெள்ளையத் தேவா விமர்சனம்

பலே வெள்ளையத் தேவா விமர்சனம்

விமர்சனம்
  பலே வெள்ளையத் தேவா விமர்சனம் நாயகன் சசிகுமார் படித்து முடித்துவிட்டு அரசாங்க வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அம்மா ரோகிணி போஸ்ட் மாஸ்டராக பணி செய்து வருகிறார். இந்நிலையில், ரோகிணிக்கு மதுரை பக்கத்தில் உள்ள வயலூர் என்ற கிராமத்திற்கு பணி மாற்றம் வருகிறது. அந்த ஊரில் கேபிள் டிவி நடத்தி வரும் வளவன், எந்த வீட்டிலும் டிஷ் ஆன்டெனா மாட்டக்கூடாது என்றும் தனது கேபிள் டி.வி.யையே அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்றும் அராஜகம் செய்து வருகிறார். இதனால், அந்த ஊரில் யாரும் டிஷ் ஆன்டெனா வாங்குவதே கிடையாது. அதே ஊரில், கறிக்கடைக் காரர் பாலா சிங்கின் மகளான நாயகி தான்யா, மகளிர் சுயஉதவிக் குழுவில் பணியாற்றுகிறார். இவரை சசிகுமார் ஒருதலையாக காதலிக்கிறார். அதே ஊரில் வசிக்கும் கலகலப்பான தம்பதிகளான கோவை சரளாவையும், சங்கிலி முருகனையும் கைக்குள் போட்டுக் கொண்டு நாயகியை பின் தொடர்கிறார் சசிகுமார்....
கத்தி சண்டை விமர்சனம்

கத்தி சண்டை விமர்சனம்

விமர்சனம்
படத்தின் ஆரம்பத்தில் கண்டெயினரில் வருகின்ற பணத்தை மடக்கி அதனை கவர்மெண்டிடம் ஒப்படைக்கிறார் போலீஸ் அதிகாரி ஜெகபதி பாபு. அதற்கு அடுத்த காட்சியில் நாயகன் விஷால் என்ட்ரி ஆகிறார். அப்பாவியாக வரும் நாயகன் விஷால், நாயகி தமன்னாவைக் காதலிக்க அவருக்கு பல்வேறு சோதனைகள் நடத்தி தனது தங்கையின் மாப்பிள்ளையாக தேர்வு செய்கிறார் ஜெகபதி பாபு. திடீரென ஜெகபதி பாபுவை ஒரு கும்பல் கடத்தி விடுகிறது. அந்த கும்பல் ஜெகபதி பாபுவிடம் 10 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். பணம் கொடுக்கவில்லையென்றால் உனது குடும்பத்திற்கு தான் பாதிப்பு என அந்த கும்பல் ஜெகபதி பாபுவை மிரட்ட, அவர் விஷாலுக்கு போன் செய்து வீட்டின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள டைல்ஸ்க்கு அடியில பணம் இருக்கு எடுத்து வா எனக் கூறுகிறார். ஜெகபதி பாபு கூறியதுபோல பணத்தை எடுத்து செல்லும் விஷால் பணத்தைக் கொடுக்காமல் வில்லன்களிடம் சண்டை போட்டு ஜெகபதி பாபுவைக் காப்பா...
மணல் கயிறு 2 விமர்சனம் 

மணல் கயிறு 2 விமர்சனம் 

விமர்சனம்
மணல் கயிறு 2 முதல் பாகத்தில் திருமண புரோக்கராக வரும் விசுவிடம் எட்டு கண்டிஷன்கள் போட்டு, அவர் பார்த்து வைக்கும் சாந்தி கிருஷ்ணாவை திருமணம் செய்து கொள்கிறார் எஸ்.வி.சேகர். அதன்பிறகு, தனது எட்டு கண்டிஷன்களுக்கும் அவள் சற்றும் பொருத்தமானவள் இல்லை என்று தெரிந்ததும், வேறு வழியில்லாமல் அவளுடனேயே 34 வருடங்கள் வாழ்ந்து விடுகிறார். 35 வருடங்களுக்கு பிறகு மணல் கயிறு 2-ம் பாகத்தில் எஸ்.வி.சேகருக்கு திருமண வயதில் பெண் இருக்கிறாள். அவள்தான் பூர்ணா. திருமணத்தில் பூர்ணாவுக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. எந்நேரமும் பிசினஸிலேயே பிசியாக இருக்கிறாள். இந்நிலையில், பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் திருமணம் செய்ய சம்மதிக்கும் பூர்ணா, தனது அப்பா போலவே தனக்கு வரும் மாப்பிள்ளை தன்னுடைய 8 கண்டிஷன்களுக்கும் ஒத்துப்போனவராக இருக்க வேண்டும் என்று கூறுகிறாள். தனக்கு பெண் பார்த்த விசுவையே தனது பெண்ணுக்கும் மாப்பிள்ளை ...
பறந்து செல்ல வா விமர்சனம் 

பறந்து செல்ல வா விமர்சனம் 

விமர்சனம்
  தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வேலை தேடி செல்கிறார் நாயகன் லுத்புதீன் பாட்ஷா. அங்கு நண்பன் சதீஷ், ஆனந்தி ஆகியோருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்து வேலை தேடி வருகிறார். எந்த பெண்ணை பார்த்தாலும் உடனே காதல்வயப்படும் லுத்புதீன், அந்த பெண்ணிடம் சென்று தன்னை காதலிக்குமாறு கேட்பது வழக்கம். இதனால், இவருடன் தங்கியிருக்கும் பெண்கள் இவரை எப்போதும் கிண்டல் செய்து வருகின்றனர். இதனால், தான் யாரையாவது காதலிப்பதுபோல் அவர்களிடம் காட்டி வாயை அடைக்க முடிவு செய்கிறார். இதற்காக, வழியில் கிடக்கும் பேப்பரில் அவர் பார்த்த நார்லே கேங்க்கை தனது ஜோடியாக தேர்வு செய்கிறார். பின்னர் ஆர்.ஜே.பாலாஜியின் ஆலோசனையை கேட்கிறார். ஆர்.ஜே.பாலாஜி, அந்த பெண்ணின் பெயரில் போலி பேஸ்புக் பக்கத்தை ஒன்றை உருவாக்கி, அதில் லுத்புதீனும், நார்லேவும் சேர்ந்து இருப்பதுபோல் புகைப்படங்களை உருவாக்கி பதிவு செய்கிறார். இதையெல்லாம் பார்...
நேர்முகம் விமர்சனம்

நேர்முகம் விமர்சனம்

விமர்சனம்
சிறு வயதில் தாயை இழந்து சித்தி கொடுமைக்கு ஆளான ஆதித்யா மேனன், ஒரு மனோதத்துவ மருத்துவர். இவர் சொந்தமாக கிளினிக் ஒன்றை வைத்திருக்கிறார். இவருக்கு பெண்கள் என்றால் சுத்தமாக பிடிக்காது. அவரிடம் சிகிச்சைக்கு வரும் இளம் ஜோடிகளை இவர் பல நாள் அடித்து உதைத்து, அவர்களை பலவிதங்களில் பயமுறுத்தி பிரித்து அனுப்புகிறார். இந்நிலையில், இவரிடம் நாயகன் ரஃபியும், அவரது காதலியான நாயகி மீனாட்சியும் மாட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் அந்த மருத்துவமனைக்கு வந்த பிறகு ஆதித்யா மேனன் அடைத்து வைத்துள்ள பல ஜோடிகளில் சிலர் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர். இந்நிலையில், காணாமல் போன காதல் ஜோடிகளை பாண்டியராஜன் தலைமையிலான போலீஸ் குழு தேட ஆரம்பிக்கிறது. இறுதியில், காதல் ஜோடிகளை அடைத்து வைத்திருக்கும் ஆதித்யா மேனனை சட்டத்தின் முன் நிறுத்தியதா? அடைத்து வைக்கப்பட்டிருந்த ஜோடிகளை கொலை செய்த மர்ம நபர் யார்? என்பதை கண்டுபிடித்தார...