`பாகுபலி’ நடிகர் பிரபாஸ் உருக்கமான கடிதம்
இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த தென்னிந்திய திரைப்படம் `பாகுபலி' என்று சொல்லும் அளவுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்தது. அதுமட்டுமல்லாமல் வசூல் ரீதியிலும் உலக அளவில் பெயர் சொல்லும் படமாக `பாகுபலி' உருவெடுத்துள்ளது. `பாகுபலி' படத்தின் இரண்டாவது பாகம் உலகளவில் ரூ.1700 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்திருக்கிறது.
இரண்டு பாகமாக வெளியான `பாகுபலி' படத்தின் முதல் பாகம் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜுலை 10-ஆம் தேதி வெளியானது. நேற்றோடு `பாகுபலி' முதல் பாகம் திரையிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது. `பாகுபலி' படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர், சுப்பா ராஜு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். `பாகுபலி' படத்தின் மூலம் உலக அளவில் இவர்கள் பிரபலமாகிவிட்டனர் என்று கூறினால் அது மிகையாகாது. அதிலும் பிரபாஸ், இந்திய ப...









