6 இயக்குனர்கள், 4500 துணை நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’
ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’. இப்படத்தைரஜாக் இயக்கியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.ஸ்ரீகாந்த் இசையமைத்திருக்கிறார்.
கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் ஆகிய பிரம்மாண்ட இயக்குனர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். மேலும், 'பவர்ஸ்டார்' சீனிவாசன், ஸ்வாதி, அஸ்மிதா, ரத்திஷ், விஷ்வா, கண்ணன், ராஜ், திவ்யா உள்ளிட்ட 4500 துணை நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
வாழ்க்கையில் விரக்தியடைந்து, யாருடைய ஆதரவும் இல்லாமல் இருக்கும் நான்கு முதியவர்களுக்கு, அதிக தொகைக்கு பெரிய வேலை ஒன்று வருகிறது. இதை முடிக்க நான்கு முட்டாள் இளைஞர்களின் உதவியை நாடுகிறார்கள். இந்த இளைஞர்களின் செயல்களால், நான்கு முதியவர்கள் சமூகத்தில் தீவிரவாதிகளாக சித்தரிக்...








