தமன் குமார் & அபி சரவணன் இணைந்து நடிக்கும் கஞ்சா தோட்டத்தின் பின்னணியில் உருவாகும் ‘சூறாவளி’..!
கேரளாவின் அடர்ந்த காட்டுக்குள் உருவாகும் ‘சூறாவளி’..!
மலையாள இயக்குனர்கள் பலருக்கும் தமிழில் படம் இயக்க வேண்டும் என்கிற ஆர்வம் நிறையவே உண்டு.. இதற்கு முன் பலர் அப்படி வந்து தங்களது திறமையை நிரூபித்துள்ளார்கள்.. அந்தவகையில் மலையாள திரையுலகில் இருந்து புதிய வரவாக தமிழுக்கு வந்திருப்பவர் தான் இயக்குனர் குமார் நந்தா.
மலையாளத்தில் ‘கொட்டாரத்தில் குட்டி பூதம்’, ‘முள்ளசேரி மாதவன் குட்டி நேமம் P.O’ ஆகிய படங்களை இயக்கியுள்ள இவர் மலையாள டிவி சீரியல்களில் பிரபல நடிகையான 'பிரஜூஷா (Prajusha)' கதையின் நாயகியாக நடிக்கும் ‘அகதி’ எனும் தமிழ் படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இந்தப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது..
இதை தொடர்ந்து அடுத்ததாக ‘சூறாவளி’ என்கிற படத்தை இயக்கவுள்ளார் குமார் நந்தா. கோல்டன் விங்ஸ் நிறுவனம் சார்பாக ஷ்யாம் மோகன் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு V.S. சஜி ஒளிப்பதிவு செய்ய...









