
வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ திரைப்படங்களை தொடர்ந்து 4வது முறையாக சிவா-அஜித் கூட்டணியில் ‘விஸ்வாசம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வில்லன் ரவி ஆவனா மற்றும் தல அஜித் இடையேயான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது. இதன் புகைப்படங்கள் சமீபத்தில் லீக்காகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இப்படத்தில் அஜித் அப்பா – மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்தது. இந்நிலையில், அஜித் நடிக்கும் ஒரு கதாபாத்திரன் பெயர் ‘தூக்கு துரை’ என கூறப்படுகிறது. ஆனால், இது அப்பா அஜித்தின் பெயரா அல்லது மகன் அஜித்தின் பெயரா என்பது தெரியவில்லை.
388 Views
