
லதா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில்
சமுத்திரகனி – சாம் ஜோன்ஸ் நடிக்கும்
“ஏமாலி”
லதா புரோடக்ஷன்ஸ் சார்பாக மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக M. லதா தயாரிக்க முகவரி, தொட்டி ஜெயா, நேபாலி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் V. Z . துரை “ஏமாலி” எனும் புதிய படத்தை இயக்குகிறார்.

எதார்த்த நடிகர் சமுத்திரகனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உடன் புதுமுகம் சாம் ஜோன்ஸ் நடிக்கிறார். இவர்களுடன் சிங்கம் புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்க அதுல்யா ரவி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

“ஏமாலி” படத்தின் பூஜை இனிதே முடிந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் துவங்கியுள்ளது.

328 Views
