சனிக்கிழமை, ஜூன் 6
Shadow

யதார்த்தம் இருந்தும் வேகம் எடுக்காத விருதாச்சலம்

யதார்த்தம் இருந்தும் வேகம் எடுக்காத விருதாச்சலம் – விமர்சனம்

கதாநாயகன் விருதகிரியும் அத்தை பெண்ணும் சின்ன வயதில் இருந்தே  பாசத்துடன் இருக்கிறார்கள்.  ஒரு திருவிழாவில் அத்தைப்  பெண்ணை  ஊர் பெரியவரின் தம்பி சம்பத் கீழே தள்ளிவிட, அதனால் ஆத்திரப்பட்டு விருதகிரி சம்பத்தின் கையை வெட்டி விடுகிறார். இந்த கலவரத்தில் அத்தை தன் மகளை அழைத்துக் கொண்டு ஊரை விட்டே சென்று விடுகிறார். 

விருதகிரியும், சம்பத்தும் சிறுவர் சீர்திருந்த பள்ளியில் சேர்க்கப்பட்டு பெரியவர்களான பின்னர் விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால் சம்பத் மட்டும் பழி வாங்க விருதகிரியை பல வழிகளில் முயல்கிறார். இதற்கிடையே அந்த கிராமத்திற்கு கதாநாயகி  ஸ்வேதா  டீச்சராக வருகிறார். விருதகிரியின் நல்ல பண்பை பார்த்து காதலிக்க தொடங்குகிறார். ஊர் பெரியவரின் மகளும் விருதகிரியை ஒருதலையாக காதலிக்கிறார். 

யார் காதல் வென்றது… விருதகிரியை பழிதீர்த்தாரா சம்பத்… அத்தைப் பெண் என்ன ஆனார்… என்பது தான் பட கிளைமாக்ஸ். 

ஸ்வேதா, சமீரா, ஷெரீன் தாஹா, சம்பத்ராம், பாவாலட்சுமணன், காதல் சரவணன், வெண்ணிலா கபடிக்குழு ஜானகி, மதுபானக்கடை ரவி, நெல்லை சிவா, ஆர்.என்.ஆர்.மனோகர், சுதா, இளங்கோ, அபிஷேக், நிருபமா, டைரக்டர் நாராயணமூர்த்தி அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்தி கொண்டார்கள். 

சிவநேசனின் ஒளிப்பதிவும், ஸ்ரீராமின் இசையும் பரவாயில்லை ரகம். எடிட்டர் எதுவுமே பெரிதாக செய்யவில்லை. தொடர்பில்லாத காட்சிகள் அதை ஒழுங்கு படுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். 

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்-ரத்தன் கணபதி. சிறு வயதில் பார்த்த அத்தை பெண் வளர்ந்த பிறகு தன் மாமனை தேடி சொந்த ஊருக்கே வந்து சேர்ந்து காதலைச் சொல்லி ஒன்றிணையும் திரைக்கதையில் தாய்ப்பாசம், விரோதம்,அடிதடி ஆக்ஷன் கலந்த கிராமத்து கதையாக இயக்கியிருக்கிறார் ரத்தன் கணபதி. 

ஆரம்ப காட்சியில் தங்கை மீது பாசம் கொண்ட அண்ணன்கள், உண்மை நிலை தெரியாமல் தங்கையை தண்டிக்கும் காட்சியும், அந்த தங்கை நினைவாக ஒரு கோயிலும் இடம் பெற்ற காட்சி நிஜத்தில் 600 ஆண்டுகளுக்கு முன்பு தென்மாவட்டத்தில் நடந்த நிஜமான சம்பவம். கனமான காட்சியை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம். 

சமீபத்திய பிரமாண்டமான வெற்று விளம்பர படங்களுக்கு ஒரு யதார்த்த கிராமத்து கதையை படமாக்க முயற்சித்ததற்காக இயக்குனரை வாழ்த்தலாம். 

திரைக்கதையில், காட்சி அமைப்புகளில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் விருதாச்சலம் வேகம் எடுத்திருக்கும். 

306 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன