புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

மீண்டும் பாட வந்த எஸ்.ஜானகி… ரசிகர்கள் உற்சாகம்..!

 

 

பழம்பெரும் பாடகி எஸ்.ஜானகி மீண்டும் ஒரு தமிழ் படத்தில் பாடல் பாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்தியாவின் ‘நைட்டிங்கேல்’ என்று புகழாரம் சூட்டப்படும் எஸ்.ஜானகி, கடந்த 1957ஆம் ஆண்டு ‘விதியின் விளையாட்டு’ படத்தின் மூலம் அறிமுகமாகி, தனது இனிமையான தனித்துவம் மிக்க குரலால் எண்ணற்ற தென்னிந்திய திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு ஒரு மலையாள படத்தில் ‘தாலாட்டு’ பாடல் பாடி, இனி பாடப்போவதில்லை ஓய்வு எடுக்கப்போகிறேன் என அதிரடியாக அறிவித்தார்.

சுமார் 48,000 பாடகளை பாடியுள்ள எஸ்.ஜானகி, 4 தேசிய விருதுகள், 32 மாநில விருதுகளை வென்றுளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஒரியா உள்ளிட்ட மொழிகளில் பாடியுள்ள எஸ்.ஜானகிக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு ‘பத்ம பூஷன்’ விருதினை பெற்றார். பாடி அலுத்துவிட்டதாக கூறி, குரலுக்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறேன். இனி யாரும் தன்னை பாட வற்புறுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார். இது ஜானகியின் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், கிராமத்து பின்னணியில் உருவாகும் ‘பண்ணாடி’ என்ற படத்தில் ‘உன் உசுரு காத்துல..’ என்ற பாடலையும், அதன் சோக வெர்ஷனையும் ஜானகி பாடியுள்ளதாக இசையமைப்பாளர் ராஜேஷ் ராமலிங்கம் தெரிவித்துள்ளார். பழனிவேலன் இயக்கத்தில் ஆர்.வி. உதயகுமார் நடிக்கும் இப்படத்தில் எஸ்.ஜானகி பாடிய பாடல்கள் கடந்த செப்டம்பர் மாதம் ரெக்கார்டிங் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இத்தனை வயதிலும் அவரது குரல் அத்தனை தெளிவாகவும், துள்ளியமாகவும், ரம்மியமாகவும் உள்ளதாக இசையமைப்பாளர் ராஜேஷ் ராமலிங்கம் தெரிவித்துள்ளார். மீண்டும் எஸ்.ஜானகியின் பாடல்களை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

விஜய்சேதுபதி-த்ரிஷா நடித்த 96 படத்தில் சில காட்சியில் ஜானகி அம்மையார் நடித்திருந்தார். என்ன காரணத்தினாலோ அந்த காட்சிகள் நீக்கப்பட்டன அதுவும் ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்தது.
இந்த சூழலில் மீண்டும் அவர் பாடியுள்ளார் என்ற தகவலே ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.

458 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன