
நல்ல திரைப்படங்களை வெளியிட வேண்டும்; தயாரிக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தில்திரையுலகுக்கு வந்திருப்பவர் ஆர் எஸ் எஸ்எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர்எஸ்.தணிகைவேல்.
இவர், நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கிவெளியிட்டார்.
தற்போது இவர் ஒற்றைப் பனை மரம் என்றபுதிய படத்தை தயாரித்து வெளியிடஇருக்கிறார்.

‘போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும்இப்படம், சமகால சூழலில் முன்னாள்போராளிகளும் மக்களும் முகம் கொடுக்கும்சொல்லத் துணியாத கருவை தெள்ளத்தெளிவாக உருவாக்கி இருக்கிறார்கள்.
யதார்த்த நடிப்பு, இயல்பான காட்சியமைப்பு, இதயத்தை கனத்துப்போக வைக்கும்திருப்பங்கள் என கதைக்குள் உங்களைஅழைத்துச் சென்று, ஈழத்தில்கிளிநொச்சியிலுள்ள கிராமத்தில் வாழவைத்து வதைத்து விடும் அளவிற்குஇப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

இப்படத்தை தயாரித்தது குறித்துஎஸ்.தணிகைவேல் கூறும்போது, ‘ஒற்றைப்பனை மரம்’ திரைப்படத்தை தயாரித்ததில்மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தைஇப்படம் கண்டிப்பாக கொடுக்கும். நான்தயாரித்ததில் கிடைத்த மகிழ்ச்சி, நீங்கள்பார்க்கும் போது உங்களுக்கு புரியும்’ என்றார்.
இப்படம் 37 சர்வதேச திரைப்பட விழாக்களில்தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 12 விருதுகளையும் இப்படம்குவித்திருக்கிறது.
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில்உருவாகியிருக்கும் இப்படத்திற்குஅஷ்வமித்ரா இசை அமைத்திருக்கிறார். அவரது இசை தமிழ் பாரம்பரியவாத்தியங்களை மட்டுமே வைத்துஇசையமைத்திப்பது படத்திற்கு ஒருஉயிரோட்டமாக அமைகிறது.
சிறந்த இயக்குனர் விருது பெற்ற மண் படஇயக்குனர் புதியவன் ராசையாஇயக்கத்தையும், தேசிய விருது பெற்ற சுரேஷ்அர்ஸ் படத்தொகுப்பையும், சர்வதேச விருதுபெற்ற இலங்கை ஒளிப்பதிவாளர் மகிந்தஅபேசிங்க ஒளிப்பதிவையும்மேற்கொண்டுள்ளனர்.
முக்கிய பாத்திரங்களாக புதியவன் ராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன்,
பெருமாள் காசி , மாணிக்கம் ஜெகன், தனுவன்ஆகியோர் நடித்துள்ளார்கள்.
