வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

ஸ்ரீதேவியின் ‘மாம்’

ஸ்ரீதேவி கபூர், அக்ஷய் கண்ணா, அத்னான் சித்திக், சஜல் அலி, ரீவா அரோரா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘மாம்’. ‘இங்கிலிஷ் விங்கிலீஷ்’ படத்திற்கு பிறகு நாயகி வேடத்திர்ற்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் நடித்திருக்கிறார் ஸ்ரீதேவி. இவர்களுடன் சிறப்பு வேடத்தில் நவசுதீன் சித்திக் நடித்திருக்கிறார்.

போனி கபூர், சுனில்மன் சந்தா  இருவரது கூட்டு தயாரிப்பில் ஜீ ஸ்டூடியோ இன்டர்நேஷனல் சார்பில் வெளியாகவிருக்கும் படம் மாம். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி உத்யவர் என்ற விளம்பரபட இயக்குனர் இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராகிறார்.  இத்திரைப்படம் தாய்க்கும் மகளுக்குமான உறவின் நெருக்கத்தை சொல்லும் விதமாக அமைந்திருக்கிறது.

Displaying Mom (5).jpg

இத்திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் ரவி உத்யவர் கூறும்போது “வட இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது என்றாலும் கூட பெரும்பாலும் ஆண்களின் மேலாதிக்கம் வலுவாகவே இருக்கிறது. ஒரு பெண் இங்கு அமைதியாக வாழ்வதற்க்கே இரு மடங்கு வலுவாக போராடவேண்டியிருக்கிறது. எனவே எனது கதையும் கதைக்களமும் வட இந்தியாவில் தில்லி, நொய்டா பின்னணியில் அமைத்திருக்கிறேன். இந்த கதாபாத்திரங்களின் மூலமாகத்தான் என் கதையை உங்களோடு பகிர்த்திக்கொள்ள போகிறேன். இதன் மூலம் அழுகை,சிரிப்பு, கோபமுமாக பயணிப்பீர்கள் என நம்புகிறேன்.”

Displaying Mom (8).jpg

Displaying Mom (3).jpg

194 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன