ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

தங்கரதம் – விமர்சனம்

Image result for thanga ratham movie images

நடிகர்கள் : வெற்றி,அதிதி கிருஷ்ணா, சவுந்தர்ராஜன் , ‘ஆடுகளம்’ நரேன், ‘மொட்டை’ராஜேந்திரன் , சுவாமிநாதன் , சாண்டில்யா மற்றும் பலர். 
இயக்கம் : பாலமுருகன்.
காய்கறி லோடுவேன் டிரைவர்களின் வாழ்க்கை முறையும் அவர்களது காதலும் , கோபமும் , தாபமும் தான் “தங்க ரதம் ” படக்கரு.
கதை : தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய மார்க்கெட்டான ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு சுத்துப்பட்டு கிராமங்களில் இருந்து, போட்டி போட்டுக் கொண்டு காய்கறி லோடு அடிக்கும் ஒரே ஊரைச் சேர்ந்த டெம்போ வேன் டிரைவர்கள் செல்வாவும் , பரமனும் .இதில் பரமனின் டெம்போ அவருக்கு சொந்தமானது .செல்வாவின் டெம்போ வேனுக்கு அவரது ஒன்று விட்ட சித்தப்பா உரிமையாளர்.

தொழில் போட்டியால் பகையாளியாக திரியும் பரமனின் தங்கையை செல்வா ., பரமனின் தங்கை அவர்., என்பது தெரிவதற்கு முன்பிருந்தே உயிருக்கு உயிராக காதலிக்கிறார்.

அந்த காதல் பூத்து காய்த்து , கசிந்துருகி ,கனிந்ததா ? அல்லது, இவர்களது தொழில் போட்டியில் . . சிக்கி சின்னாபின்னமாகி சிதைந்தததா ..? என்பது தான் தங்க ரதம் படத்தின் கதை மற்றும் களம் மொத்தமும்!

காட்சிப்படுத்தல் : என் டி சி மீடியா & வி.கேர் புரடக்ஷன் சி எம்.வர்கீஸ் வழங்க , பாலமுருகன் எழுத்து , இயக்கத்தில் வெற்றி – அதிதி கிருஷ்ணா ஜோடியுடன் சவுந்தர்ராஜன் , ‘ஆடுகளம்’ நரேன் , ‘நான் கடவுள்” ராஜேந்திரன் , சுவாமிநாதன் , சாண்டில்யா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடிக்க , வெளிவந்திருக்கும் “தங்க ரதம் .” படத்தில், நாயகருக்கும் நாயகிக்கும் இடையேயான காதல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. அதே மாதிரி , ஆரம்ப காட்சியில் வரும் , லோடுவேன் சேஸிங் சீன்கள்காட்சிப்படுத்தப்பட்டி ருக்கும் விதமும் அசத்தல் .

கதாநாயகர் : ‘தங்க ரதம்’ லோடுவேனின் டிரைவர் செல்வாவாக நாயகர்வெற்றி செம கச்சிதம் .தான் கண்டவுடன் காதலியான அதிதி கிருஷ்ணா ஆசைப்பட்ட செம்பருத்தி பூவை ., தன் காதல் ஏற்றுக் கொள்ளப்படுவது வரை காத்திருந்து பறித்து தருவதில் தொடங்கி ., காய்கறி மார்கெட்டிற்கு முதல் ஆளாய் லோடு அடிப்பது வரை சகலத்திலும் செல்வா எனும் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

கதாநாயகி :கிராமத்து கதாநாயகியாக காதலனுக்கும் அண்ணனுக்கும் ,இடையில் நடக்கும் ஈகோ மோதலில் சிக்கித்தவிக்கும் இளம் பெண்ணாக அதிதி கிருஷ்ணா அசத்தல்.

வில்லன் :கிராமத்து வில்லனாக சவுந்தர்ராஜன் , பழநியில் ஒரு போட்டோ ஸ்டுடியோவில் தன்தங்கையும் எதிராளியும் கதலர்களாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்ததும் தரும் எக்ஸ்பிரஸனில் தொடங்கி ., அதற்காக அவரை கொள்ளவும் ஆள் ரெடி செய்து விட்டு பின் வருந்துவது வரை மிரட்டிப்பருக்கிறார்.

பிற நட்சத்திரங்கள் : செல்வா எனும் வெற்றிக்கே அவரது சித்தப்பா ‘ஆடுகளம் ‘நரேனின் நற்குணத்தை எடுத்துக் கூறும் தங்கரதத்தின் கிளினராக வரும் சாண்டில்யா பரமன் – சவுந்தரை தன் உடைந்த குரலால் அடிக்கடி செல்வாவிற்கு எதிராக உசுப்பி விடும், பரமன்லோடுவேனின் கிளீ வெள்ளப் புறா ,ஹீரோவின் பாசக்கார சித்தப்பா ‘ஆடுகளம்’ நரேன் , தன் மனைவி அடிக்கடி கேபிள் கனெக்ஷன் சரியில்லை எனக் கூறுவது ஏன் ? எனப் புரியாது வெள்ளாந்தியாகத் திரியும் ‘நான் கடவுள்” ராஜேந்திரன் , டீக்கடை சுவாமிநாதன் , உள்ளிட்ட நட்சத்திரங்கள் ஒவ்வொருவரும் அந்தந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கின்றனர் .

ஜேக்கப் ரத்தினராஜின் ஒளிப்பதிவில் திண்டுக்கல் ,பழனி , ஒட்டன்சத்திரம் பகுதிகளின் கிராமிய எழில் கொஞ்சும் அழகு ரசனை .
சுரேஷ் அர்ஸின் படத்தொகுப்பு பாராட்டிற்குரிய தொகுப்பு.
டோனி பிரிட்டோவின் இசையில் “அடி ஆத்தி புரியாத பனிக்கட்டி ஆனேனே … ” பாடலும் பின்னணி இசையும் சுகம்.
பாலமுருகன் எழுத்து , இயக்கத்தில் ஒரு சில ,டிராமா சீன் குறைகளை பெரிதாக சிந்தையில் ஏற்றிக் கொள்ளாது பார்த்தால்.,  “தங்க ரதம்’  ‘காதல் ரதம்!!”
180 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன