வியாழக்கிழமை, அக்டோபர் 1
Shadow

போலி கடிதம் தயாரித்த விவகாரம் நேரில் ஆஜராக லதா ரஜினிகாந்துக்கு போலீஸ் சம்மன்..!

 

போலி கடிதம் தயாரித்த விவகாரம் நேரில் ஆஜராக லதா ரஜினிகாந்துக்கு போலீஸ் சம்மன்..!

2014ல் வெளியான ‘கோச்சடையான்’ அனிமேஷன் படத்தை ரஜினியின் மகள் சவுந்தர்யா இயக்கியிருந்தார். படுதோல்வியை அடைந்த இப்படத்தால் ரஜினி அவரது மனைவி லதா மற்றும் மகள் மூவரும் பெரும் சங்கடங்களுக்கு ஆளானார்கள். விநியோகஸ்தர்கள் பலருக்கும் ரஜினி பதில் சொல்லவேண்டி வந்தது.

கர்நாடகத்தில் பிரபல தனியார் விளம்பர நிறுவனம் ஒன்று  இதை வாங்கி விளம்பரம் செய்தது. ஆனால், அங்கும் தமிழகத்தைப்போலவே படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை.  இதனால், அதிருப்தியடைந்த வினியோகஸ்தர்கள் மற்றும் தனியார் விளம்பர நிறுவனம், நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டுமென்று கேட்டுக் கொண்டது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் முறையிடப்பட்டதாக கூறப்படுகிறது.அப்போது, ரஜினிகாந்த் குடும்பம் தரப்பில் அவரது மனைவி, நீதிமன்றம் மற்றும் தனியார் விளம்பர நிறுவனத்திற்கு கடிதம் மூலம் விளக்கம் அளித்தார். அதில் தங்களுக்கும் இந்த படத்தின் மூலம் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனால் நஷ்ட ஈடு கொடுக்க முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது.

இதை ஏற்க மறுத்த தனியார் விளம்பர நிறுவனம், லதா கொடுத்த கடிதத்தை பரிசீலனை செய்தது. அதில் லதா வழங்கிய கடிதம் போலியானது என்று தெரியவந்தது. இதை விளம்பர நிறுவனம் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தது. நீதிமன்றம் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்படி அல்சூர் கேட் போலீசில் லதாவிற்கு எதிராக மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே ஒருமுறை லதா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அல்சூர் கேட் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், லதா தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இந்நிலையில், 2வது முறையாக சில தினங்களுக்கு முன்பு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. அதில் விளம்பர நிறுவனம் கொடுத்த புகாருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கூறப்பட்டிருந்தது.

இந்த முறை லதா ரஜினிகாந்த் நேரில் ஆஜராகி பதில் அளிக்க முடிவு செய்து இருக்கிறார். அடுத்த வாரம் 20 தேதி நேரில் வருவதாக தனது வக்கீல்கள் மூலமாக லதா ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.

இதே போல ஒரு மே மாதம் தான் கோச்சடையான் படம் ரிலீஸ் ஆனது. இப்போது அதே போல ஒரு மே மாதம் இந்த போலி ஆவண விவகாரம் முடிவுக்கு வரும் என தெரிகிறது.

பண மோசடி வழக்கைவிட இந்த மோசடி ஆவண புகார்தான் லதா ரஜினிகாந்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த மோசடி ஆவண வழக்கு விவகாரம் மீண்டும் வேகமெடுத்து இருப்பது தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன