ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 23
Shadow

தியேட்டர்களில் இனி படம் ரீலீஸ் இல்லை – விமர்சகர் ராமானுஜம்

தியேட்டர்களில் இனி படம் ரீலீஸ் இல்லை – விமர்சகர் ராமானுஜம்

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவியிலிருந்து ராமநாராயனன் ராஜினாமா செய்த பின் தமிழக அரசிடம் நேரடியாக தொடர்பு கொள்ளும் ஆற்றல் வாய்ந்த தலைமை இல்லாமல் போனது. சங்கத்தில் கோஷ்டி பூசல் அதிகமானது. இதனால் தயாரிப்பாளர்கள் நலனுக்கான எந்த செயல் திட்டமும் நிறைவேற்ற முடியாத நிலையை கூறிவிஷால் தலைமையிலான அணி தேர்தலில் வெற்றி பெற்று தலைமையை கைப்பற்றியது.
ராமநாராயாணன் ராஜினாமாவுக்கு பின் தமிழ் திரைப்பட துறையில் தயாரிப்பு, பட வெளியீடு, விநியோக துறையில் பைனான்ஸ் கொடுப்பவர்களின் ஆதிக்கம் தலை தூக்கிப்து. தேர்ந்தெடுக்கப்பட்ட சினிமா அமைப்புகளின் முடிவுகள் செல்லாக்காசானது. தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் சிலரை ஒருங்கிணைத்து தமிழ் சினிமா வர்த்தக சபை என்கிற அமைப்பை பைனான்ஸ் தரப்பு தொடங்கி வைத்தது.GSTவரியை தமிழகத்தில் ரத்து செய்வதற்கு மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க வேலை நிறுத்த போராட்டத்தை விஷால் அறிவித்தார். பாகு பலி தியேட்டர்களில் கல்லா கட்டிய நேரம் அது. வர்த்தக சபையில் அங்கம் வகித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் பாகு பலி விநியோகஸ்தர்கள். விஷால் அறிவித்த வேலை நிறுத்தத்தை ஒத்தி வைக்க கோரி அல்லது மறுபரிசீலனை செய்யவோ இவர்கள் கூறவில்லை. வேலை நிறுத்தம் அறிவிக்கவிஷால் யார், ஸ்ட்ரைக் எப்போதும் நடத்த மாட்டோம் என்று அபிராமி தரப்பு அறிவித்தது. அந்த சூழலில் படங்களின் வசூல் பாதிக்க கூடாது என்பதால் ஸ்ட்ரைக் முடிவை விஷால் தரப்பு ஒத்திவைத்தது.இந்த சூழலில் சினிமாவிற்கு கேளிக்கை வரி விதிக்கும் சட்டத்தை நடப்பு சட்டமன்ற கூட்டத்தில் தமிழக அரசு நிறைவேற்றியது. இதனால்GST + கேளிக்கை வரி என்று நிலத்தில் பாதி கிணறு கணக்காக வசூலில் பாதியை வரியாகசெலுத்த வேண்டிய நிலைக்கு தமிழ் சினிமா உள்ளானது. இந்த பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது என்பதை தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் கூடி முடிவெடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் ஒரு தரப்பினர் அபிராமி ராமநாதன் மூலம் தன்னிச்சையாக வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். வெள்ளிக்கிழமை வெளியான படங்களில் எதுவும் வேலை நிறுத்தம் அறிவித்த தரப்பால் விலைக்கு வாங்கப்பட்ட படங்கள் இல்லை என்பதால் இந்த அதிரடி முடிவு. தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்து பேசாமல் அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்தத்தை அனைத்து தரப்பினரிடமும் கலந்து பேசி வேறு தேதிக்கு மாற்றம் செய்வது என்று நேற்று இரவு விஷால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இக் கூட்டத்தில் அனைத்து சினிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஸ்ட்ரைக் தேதியை மாற்ற மறுத்தாலோ, அல்லது 3 ம் தேதி தியேட்டரை மூடும் தியேட்டர்களுடன் தொழில் ரீதியாக உறவை துண்டித்துக் கொள்வது. அந்த தியேட்டர்களில் எதிர்வரும் காலங்களில் புதிய படங்களை தயாரிப்பாளர்கள் திரையிட கூடாது என்ற முடிவு நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்துடன் திரையரங்குகள் சுமுகமாக இணைந்து தொழில் நடத்தாத அபாயகரமான சூழல் தற்போது உள்ளது. திரையரங்குகளில் படங்களை ரீலீஸ் செய்வதை நிறுத்திவிட தயாரிப்பாளர் சங்கம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. அதற்கு மாற்றாக ஆன்லைன் ரீலீஸ், உலகளாவியதொலைக்காட்சி உரிமம் வியாபாரம் மூலம் தயாரிப்பாளர்கள் முதலீட்டை லாபத்துடன் சம்பாதிக்கும் திட்டத்தை அமுல்படுத்த முடிவு செய்து உள்ளதாக தெரிகிறது. இதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

453 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன