புதன்கிழமை, மே 20
Shadow

பாராட்டு மழையில் சிறகு படப் பாடல்கள்..!

 

 

உயரப்பறக்க தயாரான சிறகு! பாராட்டு மழையில் சிறகு படப் பாடல்கள்..

பர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் தயாரிப்பில் கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் படம் சிறகு. ஹரி கிருஷ்ணன் கதையின் நாயகனாகவும், அக்ஷிதா நாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் படத்தின் எடிட்டர் அருண்குமார் பேசியதாவது,

“இந்த வாய்ப்பைத் தந்த தயாரிப்பாளர் இயக்குநர் அவர்களுக்கு நன்றி. பாட்டு ட்ரைலர் ரொம்ப நல்லா வந்திருக்கு. படமும் நல்லா வந்திருக்கு. எல்லோரும் சப்போர்ட் பண்ணுங்க” என்றார்

நடிகர் நிவாஸ் ஆதித்தன் பேசியதாவது

“என்னுடைய பிலிம் கரியரில் இது எனக்கு ரொம்ப முக்கியமான படம். இதற்கு மேல் இப்படியொரு படம் அமையுமான்னு தெரியல. இந்தப்படம் வெளிவந்த பின் எனக்கு ஒரு பெரிய வாழ்க்கை காத்திருக்கிறது. வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மாலா மணியன் அவர்களுக்கும் இயக்குநர் குட்டி ரேவதி அவர்களுக்கும் நன்றி” என்றார்.

நடிகை டாக்டர் வித்யா பேசியதாவது,

“23 வருசமா நான் மருத்துவரா இருக்கிறேன். ஆக்டிங் எனக்கு பெரிய பேஷன். எதாவது செஞ்சாகணும்னு உறுத்திக்கிட்டே இருந்தது. இந்தப்படத்துல ரொம்ப நல்ல கேரக்டர் பண்ணி இருக்கிறேன். தயாரிப்பாளர் மாலா மணியன் மேடம் எங்களை தன் பேமிலி மாதிரி பார்த்துக்கிட்டாங்க. அதே மாதிரி தான் குட்டி ரேவதி மேடமும். இந்தப்படத்துல நடிச்சிருக்கோம் என்பதை விட எங்கள் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தி இருக்கோம். சிறகு உயரப்பறக்கும்” என்றார்.

நாயகி அக்ஷிதா பேசியதாவது,

“நான் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். எனக்கு என்ன பேசுறதுன்னே தெரியல. இந்த வாய்ப்பை தந்த தயாரிப்பாளர் இயக்குநர் இருவருக்கும் நன்றி. ஹீரோ ஹரியோட நடித்தது நல்ல அனுபவம். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. அருவி படத்தின் இயக்குநர் தான் எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்தார்” என்றார்.

ஹீரோ ஹரி கிருஷ்ணன் பேசியதாவது,

“ரொம்ப சந்தோஷமான தருணமா இருக்கு. இந்த டீம் ரொம்ப சூப்பரான டீம். குட்டி ரேவதி மேடம் தான் இந்த வாய்ப்பை கொடுத்தாங்க. பெண்கள் டீம் என்பதால் ரொம்ப பயந்தேன். ஆனா பெண்கள் தான் ஸ்ட்ராங் என்பதை உணர்ந்து கொண்டேன். கேமராமேன் மிக அற்புதமாக உழைத்திருக்கிறார். அருண் எடிட்டிங் செம்மயாக வந்திருக்கிறது. இந்த விழாவின் நாயகன் அரோல்கரோலி அட்டகாசமாக மியூசிக் அமைத்து இருக்கிறார். இந்தப்படத்தில் இசை ரொம்ப முக்கியம். அதை சரியாகச் செய்திருக்கிறார்” என்றார்.

இசை அமைப்பாளர் அரோல் கரோலி பேசியதாவது

“சிறகு எனக்கு பேவரைட்டான ஸ்ரிகிப்ட். கதையைப் படிச்சதும் ஒரு பயணம் போன மாதிரி இருந்தது. குட்டி ரேவதி மேடம் எழுத்து எப்படி ஸ்ட்ராங் என்பது எல்லோருக்கும் தெரியும். கேமராமேன் பெரிய வித்தைக்காரர். கலக்கி இருக்கிறார். ஹரி கிருஷ்ணன் அவர் நல்லா கவனிக்க வைக்கிறார். இந்தப்படம் நாம் இழந்த சில உணர்வுகளை வெளிப்படுத்தும். இந்தப்படம் மூலமாக ஏ.ஆர் ரகுமான் சாரையும், மணிரத்னம் சாரையும் சந்தித்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்.” என்றார்

934 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன