
கென்யாவின் மிக ஆபத்தான விலங்குகள் இருகஅகும் காட்டுப்பகுதியில் பழங்குடிகள் எனப்படும் காட்டுவாசி மக்கள் வாழும் மசாய் மாரா கிராமத்தில் நடைபெற்ற முதல் தென்னிந்திய தமிழ் திரைப்படம் ‘ஜல்லிக்கட்டு’.

கென்யாவின் மாசாய் மாரா கிராம பழங்குடிகள் எந்த தகவல் தொடர்பும் இல்லாமல் மிக பழமையான கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறைகளை இன்றும் பாதுகாத்து வாழ்ந்து வருகிறார்கள். கால்நடைகளோடு தமிழர்களுக்கு எப்படி ஒரு நெருக்கமான உறவு இருக்கிறதோ அதேபோன்று அந்த பழங்குடி மக்களுக்கும் கால்நடைகளோடு நல்ல உறவோடு இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் கால்நடைகளின் பங்கு மிக அதிகம் காணப்படுகிறது.

தமிழகத்தில் மெரீனாவில் இளைஞர்களால் நடைபெற்ற அறப்போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் ஜல்லிக்கட்டு திரைப்படத்தில் தமிழர்களின் அடையாளமான காளைகளைப்போல மசாய் பழங்குடிகள் வைத்திருக்கிற காளைகளுக்கும் ஒரு தனித்துவமான ஒற்றுமைகள் இருக்கிறது. இதன் காரணமாக அந்த கிராமத்தில் பல காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
பறக்கும் கேஸ் பலூன் மூலமாக அடர்ந்த காட்டுப்பகுதியின் மேலும், சிங்கம் காண்டாமிருகம், ஒட்டகச்சிவிங்கி, சிறுத்தைகள் வாழும் காட்டுப்பகுதியிலும் நடைபெற்ற முதல் தமிழ்படமும் ஜல்லிக்கட்டுதான்.

அறிமுக இயக்குனர் சந்தோஷ்கோபால் முதல் படத்திலேயே மிக துணிச்சலாக படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார். அகிம்சா நிறுவனம் சார்பில் அமெரிக்காவில் வசிக்கும் கணபதி முருகேஷ், ஜெயபால் நடேசன், சிங்கப்பூரைச் சேர்ந்த குருசரவணன் இவர்களோடு இணைந்து நிருபமா தயாரித்திருக்கிறார்.
மெரீனாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்ட காட்சிகளும் தேவைப்படும் இடங்களில் இந்த படங்களில் பயன்படுத்தப்பட உள்ளது. விரைவில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.


