செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

துப்பறிவாளன் டிக்கெட் விற்பனையில் விவசாயிகளுக்கு பங்கு – விஷால் அதிரடி

 

ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் ! துப்பறிவாளன் படத்தின் தியேட்டர் வசூலில் விஷால் உதவி!

  • தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பதவியேற்பு விழாவில்,
    ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் தமிழகத்திலுள்ள அனைத்து தியேட்டர்களிலும் வசூலிக்கப்பட்டு வறுமையில் உள்ள விவசாயிகள் குடும்ப நலனுக்காக கொடுக்கப்படும் என்று தமிழ் திரைப்படம தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவித்தார். அதன்படி விஷால் தயாரித்து, நடித்து வெளியாகும் ‘துப்பறிவாளன் ‘ படத்தின் திரையரங்கு வருமானத்தில் இருந்து ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வறுமையில் உள்ள விவசாயிகள் குடும்ப நலனுக்காக கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். தமிழ் நாட்டில் 350க்கும் அதிகமான தியேட்டர்களில் துப்பறிவாளன் திரையிடப்படுகின்றது. அதில் எத்தனை காட்சிகள் நடைபெறுகின்றதோ,அத்தனை காட்சிகளிலும் விற்க்கப்படும் டிக்கெட்டுகளிலிருந்தும் ஒரு ரூபாய் வசூலித்து கொடுக்கப்படும்.
    இவ்வாறு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.
366 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன