புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

கொரானா ஊரடங்கில் போன வாரம் பாகுபலி நடிகை இந்தவாரம் தாதா87 தயாரிப்பாளர் மது கடத்தலில்…

 

போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய காரில் மது பாட்டிகள் கடத்திய சாருஹாசனின் தாதா87 பட தயாரிப்பாளர் கைது!

கொரானா ஊரடங்கு நேரத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவோ மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சென்னையின் பல பகுதிகளில் கடுமையான வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் சென்னை மதுரவாயல் அருகே சென்னை நோக்கி வந்த சொகுசு காரை போலீசார் வாகன சோதனைக்கு நிறுத்தினர்.

கார் முகப்பில் போலீஸ் என ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டு இருந்தது.

இருந்த போதும் காரில் வந்தவர்களிடம் உரிய ஆவணங்களை கேட்டபோது இ பாஸ் உள்ளிட்ட எந்த அனுமதி சீட்டும் இல்லை என தெரிய வந்தது.

இதையடுத்து காரை சோதனை செய்த போலீசுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கார் பின்சீட்டிலும், கார் டிக்கியிலும் பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் இருந்தது.

இதையடுத்து போலீஸ் விசாரணையில் காரில் வந்தது ஒரு சினிமா தயாரிப்பாளர் என்பதும், இவர் ஏற்கனவே கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் நடிப்பில் தாதா87 படத்தை எடுத்து ரிலீஸ் செய்ததும், இப்போது டைம் இல்ல என்ற படத்தை தயாரித்து வருவதும் தெரிய வந்தது.

இவரோடு ஆனந்தராஜ் என்ற பல்மருத்துவரும் இருந்தார்.

இவர்கள் இருவரையும் மது கடத்தி வந்ததாக கைது செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

இவர்கள் பயன்படுத்திய காரில் போலீஸ் அடையாள அட்டை ஒன்றும் கைப்பற்றபட்டு உள்ளது.

அந்த போலீஸ் அட்டையில் உள்ள பெயரில்தான் காரும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. சோதனை சாவடிகளில் இந்த போலீஸ் அடையாள அட்டையை காண்பித்து மதுவை கடத்தி வந்திருக்கலாம் என தெரிகிறது.

கொரானா நேரத்தில் சினிமா தொழில் முற்றிலும் முடங்கி உள்ள நிலையில் தயாரிப்பாளர் அடையாளத்தில் மதுவிற்பனைக்கு தயாராகி விட்டதாக தெரிகிறது. கடந்த வாரம் ரம்யாகிருஷ்ணன் கார் மது கடத்தலில் சிக்கியது. இந்த வாரம் தாதா87, டைம் இல்ல படங்களின் தயாரிப்பாளர் மது கடத்தி சிக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

335 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன