புதன்கிழமை, மே 20
Shadow

துல்கர் சல்மானின் சோலோ பட டிரைலரை பார்த்து பாராட்டிய ரஜினி..!

துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும், பெஜாய் நம்பியார் இயக்கத்தில் உருவாகி வரும் அக்டோபர் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் படம் ‘சோலோ’.

இப்படத்தின் தயாரிப்பாளர்  அனில் ஜெயின் மற்றும் இயக்குனர் பெஜாய் நம்பியார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து ‘சோலோ’ படத்தின் ட்ரைலரை காண்பித்துள்ளார்.

அதனை பார்த்த சூப்பர் ஸ்டார் , ட்ரைலர் மிக அருமையாக இருப்பதாக கூறி மிகவும் பாராட்டியுள்ளார். இப்படத்தை உருவாக்கியதற்காக இயக்குனரையும் தயாரிப்பாளரையும் பாராட்டியுள்ளார்.

இந்த வாரம் ரிலீஸ் ஆகப்போகும் ‘சோலோ’ படத்திற்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார் . சூப்பர் ஸ்டாரின் இந்த பாராட்டுக்கள் ‘சோலோ’ அணியினரை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

337 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன