
நடந்து முடிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் புதிய தலைவராக ராமசாமி முரளி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரபல இயக்குநரான டி.ராஜேந்தர் 169 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
தலைவர் தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம் :
மொத்தம் பதிவான வாக்குகள்-1050
ராமசாமி முரளி-557
டி.ராஜேந்தர்-388
தேனப்பன்-88
செல்லாதவை-17

கெளரவ செயலாளர் பதவிக்கான தேர்தலில் ராதாகிருஷ்ணனும், மன்னனும் வெற்றி பெற்றுள்ளனர்.
துணைத் தலைவர்களில் ஒருவராக வெற்றி பெற்ற கதிரேசன், சுயேட்சையாக போட்டியிட்டவர்.
கெளரவ செயலாளர்களில் ஒருவராக வெற்றி பெற்ற மன்னன், டி.ராஜேந்தர் அணியில் போட்டியிட்டவர்.
மற்ற வெற்றியாளர்கள் அனைவரும் ராமசாமிமுரளி அணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
391 Views
