சனிக்கிழமை, அக்டோபர் 10
Shadow

அனிமேஷன் படமாக உருவாகும் மெகா பட்ஜெட் படத்தை இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்!

 

விஜய்யின் 65-வது படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் திடீரென அப்படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து அவர் யாருடைய படத்தை இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் மெகா பட்ஜெட் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் ‘தி லயன் கிங்’ போன்று முழுக்க முழுக்க அனிமேஷன் படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன