சனிக்கிழமை, மே 2
Shadow

ஆர்.ஆர்.ஆர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

ஆர்.ஆர்.ஆர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5  மொழிகளில் உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், கொரோனா தொற்று 2வது அலை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சுமார் இரண்டு மாதத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆர்.ஆர்.ஆர் படப்பிடிப்பை வருகிற ஜூலை 1ம் தேதி முதல் மீண்டும் தொடங்க உள்ளார்களாம்.
349 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன