

இரண்டாம் பாகம் எடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட அவர் வரவில்லை. படப்பிடிப்புக்கு சரியாக அவர் ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. படத்தின் முதல் பாகம் வெளிவந்து சரியாக ஓடவில்லை. இரண்டாம் பாகத்தில் நடிக்கவும் அவர் வரவில்லை. இதனால் எனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விநியோகஸ்தர்களுக்கும் பைனான்சியர்களுக்கும் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆக சிம்புவால், வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன். இது குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கத்தில் அளித்த புகாரில் கூறி உள்ளேன். நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். ஒரு மாதம் ஆகியும் இதற்கு தீர்வு ஏற்படவில்லை. சிம்புவிடம் நஷ்ட ஈடு பெற்றுத்தரவேண்டும்” என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இப்பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்துள்ள சிம்பு, “ஒரு படம் நடித்துக்கொண்டிருக்கும் போது, என் மீது அதன் தயாரிப்பாளர் புகார் கூறினார் என்றால் பதில் சொல்கிறேன். படத்தில் நடித்து, வெளியாகி முடிந்துவிட்டது. நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. அப்படியொரு சட்டமும் இல்லை. என்றைக்குமே என் படத்தின் தயாரிப்பாளரைப் பற்றி தவறாகப் பேச மாட்டேன். என் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்று வந்தால், அப்போது என் பதிலைக் கூறுவேன்” என்று பதிலளித்திருக்கிறார்.
