சனிக்கிழமை, ஆகஸ்ட் 22
Shadow

ஜெயம் ரவி நடிக்கும் மியூஸிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லர்

சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ‘டிக் டிக் டிக்’ என்ற படத்தில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. ‘மிருதன்’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இருவரும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடித்துள்ளார். ஜெயம் ரவி மகன் ஆரவ், முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், மியூஸிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

 

441 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன