
போஸ்டர் டிசைன்களில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சமுத்ரகனியின் ரைட்டர்!
சமுத்ரகனி படம் என்றாலே ஏதோ ஒரு விஷயம் இருக்கும் என யோசிக்கும் அளவுக்கு சமீபத்திய படங்கள் பேசு பொருளாக மாறியிருக்கிறது.
இப்போது அதற்கு இன்னும் வலு சேர்க்கும் விதமாக காவல்துறையில் உள்ள ரைட்டர் பதவியில் இருக்கும் சிரமங்களை மிக சீரியசாக சொல்ல வருகிறது ரைட்டர்.
நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் ரஞ்சித் தயாரிக்கும் இந்த படத்தின் பப்ளிசிட்டி போஸ்டர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வலியுடன் மிக யதார்த்தமான கதையை சொல்வது போன்று வெளியாகி வருகிறது.
இந்த டிசைன்கள் அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏகத்துக்கு எகிற விட்டிருக்கிறது.
கபிலன், சந்தோஷ் நாராயணன் இருவரும் இந்த டிசைன்களின் மீது காட்டும் ஈடுபாட்டால் தமிழ் சினிமாவில் ரைட்டர் மீதான எதிர்பார்ப்பும் ஏகத்துக்கு எகிறி உள்ளது.
நடிகர்கள், நடிகைகள் அரைகுறை ஆடை பெண்கள் என எதையும் பயன்படுத்தாமல் ஒவ்வொரு டிசைனும் வித்தியாசமாக வெரைட்டி காட்டுவதால் அடுத்து என்ன டிசைன் வரும் என்ற எதிர்பாப்பும் ரைட்டர் டிசைன் ஏற்படுத்தி உள்ளது.
இந்த படம் வரும் 24ல் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.
