ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

நான்ஸ்டாப் லிப் லாக் ”மன்மதலீலை” க்ளிப்ஸ்! சர்ச்சையில் சிக்கும் வெங்கட் பிரபு!!

 

 

மன்மதலீலை திரைப்படத்தின் க்ளிம்ப்ஸை நேற்று சிம்பு வெளியிட்டார். வெங்கட்பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்திருக்கும் இந்தப் படத்தில் முதல் க்ளிப்ஸே இளைஞர்கள் மத்தியில் கிளுகிளுப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாநாடு படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு மன்மதலீலை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இது அடல்ட் காமெடி ஜானரில் தயாராகியுள்ளது.

ஹாலிவுட்டில் வெளியான அமெரிக்கன் பை போன்ற ஒரு திரைப்படம் இது என வெங்கட்பிரபு கூறியிருந்தார்.

அவர் உதாரணத்திற்கு கூறிய திரைப்படம் முழுக்கவே இளைஞர்களின் காமத்தால் நிறைந்தது.

ஏற்கனவே கோவா திரைப்படத்தில் இதுபோன்ற ஒரு கதையை வெங்கட் பிரபு முயற்சி செய்தார். ஆனால் படம் கிளிக் ஆகவில்லை.

ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா அந்தப் படத்தை தயாரித்திருந்தார். ரஜினி மகளுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று அப்போது விமர்சனங்கள் எழுந்தன.

மன்மதலீலை க்ளிம்ப்ஸ் கிட்டத்தட்ட 40 வினாடிகள் ஓடுகிறது. இது முழுக்க அசோக்செல்வன் சம்யுக்தா ஹெக்டேயையும் ரியா சுமனையும் முத்தமிட்டுக் கொண்டே இருக்கிறார். அதுவும் பிரெஞ்சு முத்தம். இளைஞர்கள் பெருமளவில் இந்த க்ளிப்ஸை பார்த்து பகிர்ந்து வருகிறார்கள்.

படத்தின் 40 வினாடிகளே இப்படியே இருந்தால் படம் எப்படி இருக்கும் என்ற இளசுகளின் எதிர்பார்ப்பை சரியாக குறி வைத்து அடித்திருக்கிறார் வெங்கட்பிரபு. இந்தப்படத்தில் ஸ்மிருதி வெங்கட்டும் மூன்றாவது நாயகியாக நடித்துள்ளார். ஆக க்ளிப்ஸைவிட படம் பல மடங்கு வேறு மாதிரி இருக்கும்.

ஹாலிவுட் ரேஞ்சுக்கு படமெடுக்கிறேன் என ஆபாசங்களை அள்ளித்தெளிக்கும் வேலைஅயை இயக்குனர் வெங்கட் பிரபு தொடங்கி விட்டதாக சர்ச்சையும் எழுந்துள்ளது.

377 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன