ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

ரசிகர்களுடன் தியேட்டரில் படம் பார்த்த வலிமை படக்குழுவினர்!

அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவான வலிமை திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகி இருக்கிறது.

வலிமை ரிலீசையொட்டி ரசிகர்கள் தியேட்டரில் பட்டாசு வெடித்து, நடனம் ஆடி திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் அஜித்துக்கு கட்-அவுட் வைத்து மாலை போட்டும் அலங்கரித்து வைத்தார்கள்.

இந்நிலையில், வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், நாயகி ஹுமா குரேஷி, வில்லன் கார்த்திகேயா உள்ளிட்ட படக்குழுவினர் சென்னையில் உள்ள தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை பார்த்திருக்கிறார்கள்.

இவர்கள் தியேட்டரில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன