ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 4
Shadow

வயதான சங்க உறுப்பினர்களுக்கு 30 நாள் வேலை திட்டம், வட்டியில்லா கடன் – பாக்யராஜ் அதிரடி அறிவிப்பு

 

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் இன்று காலை நடை பெறுகிறது.

ஏற்கனவே தலைவராக 2 முறை பதவி வகித்த செல்வமணி மீண்டும் தலைவர் பதவிக்கு நிற்கிறார். அவரை எதிர்த்து இயக்குனர் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.

பாக்யராஜுக்கு பாரதிராஜாவின் ஆதரவு இருப்பது கூடுதல் பலம்.

அதோடு இப்போது எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் பாக்யராஜ் மிக நேர்மையான நிர்வாகத்தை நடத்தி வருவதை அனைவரும் அறிந்திருக்கிறார்கள்.

நேற்று மாலை இமயம் அணியின் கூட்டம் இயக்குனர் பாக்யராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பாக்யராஜ் பேசியதாவது:

எழுத்தாளர்கள் சங்கத்தில் எத்தனையோ மாற்றங்களை பார்த்திருப்பீர்கள். அதைவிட பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்த இருக்கிறோம்.

வயதான இயக்குனர்கள், உதவி இயக்குனர்களுக்கு 30 நாட்கள் வேலை திட்டம் செயல்படுத்த இருக்கிறோம். பிரபலமான இயக்குனர்கள் படம் எடுக்கும் போது வயதான சங்க உறுப்பினர்களுக்கு வேலை வழங்க திட்டம். அதேபோல  சங்க உறுப்பினர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க திட்டம். ஒருவேளை கடன் வாங்கிய உறுப்பினர் கட்டாமல் போனால் அதை இந்த் பாக்யராஜ் பொறுப்பேற்று கட்டுவான்.

சங்க நிதியை உயர்த்த பிரபல நடிகர்களின் தேதி வாங்கி சினிமா எடுக்க பேசி வருகிறோம். இப்படி பல திட்டங்களை வைத்திருக்கிறோம்.

ஆனால் செல்வமணி செய்யாதை எல்லாம் சொல்லி வருகிறார். தேர்தல் 27ம் தேதி. அபடியிருக்க 28 தேதி அமைச்சருடன் சம்பள பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம் என சொல்லி இருக்கிறார். தேர்தலே நடக்காமல் வெற்றி பெற்றது போல பேசுகிறாரே ஏதாவது ஓட்டுக்களை முன்பாகவே போட்டு வைத்து விட்டார்களோ.

இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.

கூட்டம் நடந்த மண்டபத்தில் இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் என கூட்டம் நிரம்பி வழிந்தது.

அதே நேரம் செல்வமணி தலைமையிலான கூட்டமும் நேற்று நடை பெற்றது. அங்கே சொல்லிக் கொள்ளும் அளவுக்கு கூட்டம் வராததால் செல்வமணி கடும் அப்செட் ஆனதாக கூறப்படுகிறது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன