
மனைவியை பிரிந்த இசையமைப்பாளர் டி.இமான் மறுமணத்திற்கு போட்டிருக்கும் கண்டிஷன்கள் தான் தற்போதைய ஹாட்.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி.இமான். இவரது இசையில் சூர்யா நடித்திருக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அண்ணாத்த படத்தில் சிறப்பாக பணியாற்றியதன் பொருட்டு ரஜினிகாந்திடம் சிறப்பு பரிசையும் பெற்றார்.
தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரையில் மோனிகா ரிச்சர்டு என்பவருடன் கடந்த 2008-ம் ஆண்டு இமானுக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே தனது மனைவியை விட்டு பிரிவதாக கடந்த டிசம்பர் இறுதியில் அறிவித்தார் இமான்.
இந்நிலையில் தற்போது தனது மறுமணம் குறித்து பேசியுள்ள இமான், மறுமணம் செய்துக் கொள்வதாக இருந்தால், தனக்கு வரும் மனைவி கண்டிப்பாக விதவை அல்லது விவாகரத்து பெற்றவராக இருக்க வேண்டும் என்றும், அவர் ஒரு பெண் குழந்தைக்கு தாயாக இருக்க வேண்டும் என்றும், தன்னுடைய குழந்தைகளிடம் அன்பாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்
