செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 16
Shadow

விசித்திரன் – விமர்சனம் 3.75/5

காவல்துறையில் பணிபுரிந்து வந்த ஆர் கே சுரேஷ், மகள் இறந்த துக்கம் தாளாமல் VRS வாங்கிக் கொண்டு தனிமையில் நாட்களை நகர்த்துகிறார். மனக்கசப்பு காரணமாக வேறொரு திருமணம் செய்து கொண்ட மனைவி பூர்ணாவையும் அவ்வப்போது நினைத்து நினைத்து கண்கலங்கி மது, புகை என தன்னைத் தானே மனதையும் உடலையும் வருத்திக் கொள்கிறார்.

இவர் வி ஆர் எஸ் வாங்கிச் சென்றாலும், முடிக்க முடியா பல வழக்குகளை முடித்துத் தருமாறு காவல்துறையே இவரிடம் வந்து நிற்கும், அந்த அளவிற்கு திறமையானவர்.
ஒருநாள், பூர்ணா விபத்தில் சிக்கி இறந்து விட, அது விபத்து அல்ல, கொலை என கண்டறிகிறார் ஆர் கே சுரேஷ்.

யார் அந்த கொலை செய்தது.? கொலைக்கான காரணம் என்ன.? இதில் மருத்துவமனையில் நடக்கும் ஊழல் என்னென்ன என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும் படம் தான் “விசித்திரன்”.

மாயன் கதாபாத்திரத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் ஆர் கே சுரேஷ். இப்படியொரு நடிப்பை இதுவரை வரை கொடுத்ததில்லை. தனது உடலை வருத்திக் கொண்டு அந்த கதாபாத்திரத்திற்கு அவர் பட்ட மெனக்கெடல் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார். தனது ஒவ்வொரு அசைவையும் அக்கதாபாத்திரத்திற்கான அசைவாகவே கொடுத்திருக்கிறார் ஆர் கே சுரேஷ். க்ளைமாக்ஸ் காட்சியில் நடக்கும் விபத்து காட்சியில் மிகவும் தத்ரூபமாக நடித்து அசத்தியிருக்கிறார். இப்படத்தின் மூலம் பல விருதுகளை குவிக்கப் போகும் நாயகன் ஆர் கே சுரேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள்.

நாயகி பூர்ணா, நாயகனுக்கு இணையாக தனது அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். அமைதியான நடிப்பில் அப்ளாஷ் பெறுகிறார். கண்களால் கவிதை பேசி செல்கிறார் மதுஷாலினி.

கொலையை கண்டுபிடிக்கும் க்ரைம் படமாக மட்டுமல்லாமல், மருத்துவமனைகளில் நடக்கும் ஒருவிதமான திருட்டுத்தனத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்றதற்காகவே இயக்குனர் பத்மகுமாருக்கு மிகப்பெரும் பாராட்டுகள். இப்படியும் ஒரு ஊழல் நடக்குமா என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு வியப்படவைத்து விட்டார் இயக்குனர்.

ஜி வி பிரகாஷ்குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான்., பின்னனி இசை படத்தோடு பயணம் புரிய வைத்து விட்டது.

வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம். ஒவ்வொரு காட்சியையும் அழகூற கொடுத்திருக்கிறார்.

விசித்திரன் – பாராட்டுக்குறியவன்..

139 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன