செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நாணயம், தபால்தலை முதல்வருக்கு எம்ஜிஆர் உறவினர் நன்றி கடிதம்

இது குறித்து எம்ஜிஆர் உறவினர் தீபன் முதலமைச்சர் பன்னீர் செல்வம் அவர்களுக்கு எழுதிய கடித விவரம்:

கோடி மக்களின் மனசில் நீங்கா இடம்பிடித்த எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் உருவம் பொறித்த நாணயங்கள், அவர் உருவம் பொறித்த தபால்தலை வெளியிட வேண்டும் என்று பாரத பிரதமருக்கு வேண்டுகோள் வைத்தோம்.
அதே கருத்தை வலியுறுத்தி நீங்களும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடையும் அதே நேரம் அதற்கான எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நீண்டகால கனவும், ஆசையுமாக அவரின் விருப்பம் படி எம்ஜிஆர் தோட்டத்தில் நடந்து வரும் மாற்றுத் திறானிகள் பள்ளியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை மறைந்த முதல்வர் அம்மா இருந்திருந்தால் எவ்வளவு சிறப்பாக நடத்தி இருப்பார்களோ அதே அளவு சிறப்பான ஒரு விழாவாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.
புரட்சித்தலைவரின் நூற்றாண்டு விழாவை அவரது வரலாற்று விழாவாக சிறப்புறச் செய்து தரும்படி புரட்சித்தலைவா¢ன் குடும்பத்தில் ஒருவராகவும் அவர்மீது பற்றுடைய தொண்டனாகவும் கண்டுகளிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் தீபன் கூறியிருக்கிறார்.

605 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன