செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

மறைந்த முதல்வர் ஜெ.,வின் வாழ்க்கை வரலாற்று முதல் ஆராய்ச்சி ஆங்கில நூல் வெளியீடு ஓசுலே மாநகர பெண் மேயர் கம்சாயினி குணரத்னே வெளியிட இலங்கை அமைச்சர் பெற்றுக் கொண்டார்

தமிழக அரசியலில் இரும்பு மனுஷியாக இந்திய அரசியலில் அசைக்க முடியாத இடத்தில் இருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்ககை வரலாற்றை ஆராய்ச்சி கட்டுரை வடிவில் பேராசிரியர் தமிழரசன் என்பவர் எழுதியிருக்கிறார். இதற்காக 2009ம் ஆண்டில் அப்போதைய எதிர்க்கட்சித்தலைவராக இருந்த ஜெயலலிதாவிடமே அனுமதியும் பெற்றிருக்கிறார். தனது வாழ்க்கை வரலாற்றை ஆராய்ச்சி கட்டுரையாக எழுத அனுமதித்து ஜெயலலிதாவும் கடிதம் கொடுத்திருக்கிறார். இந்த ஆராய்ச்சி கட்டுரையின் ஆங்கில நூல் சென்னையில் நடைபெற்ற உலக தமிழர் திருநாள் விழாவில் வெளியிடப்பட்டது.
உலக வம்சாவளி அமைப்பின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் ஆண்டுதோறும் உலக தமிழ்ர திருநாள் விழாவை நடத்துவது வழக்கம். 3வது ஆண்டாக இந்தாண்டு நடைபெற்ற விழாவில் நார்வே நாட்டில் உள்ள ஓசுலே மாநகர பெண் மேயர் கம்சாயினி குணரத்னே, இலங்கை அமைச்சர் ராதாகிருஷ்ணன், இலங்கை எம்பிக்கள் சிவலிங்கம், சிவமோகன், தொழில் அதிபர் இளம்பாரி கருணாகரன், விஐடி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், தொழில் அதிபர் டாக்டர் பழனி ஜி.பெரியசாமி, குமரி அனந்தன், கவிஞர் ரவிபாரதி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவின் முதல் நிகழ்ச்சியாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா திருவுருவ படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ‘தி ரெவலியூஷினரி டைனமிக் லேடி’ என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று ஆராய்ச்சி ஆங்கில நூலை ஓசுலே மாநகர பெண் மேயர் கம்சாயினி குணரத்னே வெளியிட இலங்கை அமைச்சர் ராதாகிருஷ்ணன், இலங்கை எம்பிக்கள் சிவமோகன், சிவலிங்கம், தொழில் அதிபர் டாக்டர் பழனி.ஜி.பெரியசாமி, தொழிலதிபர் இளம்பாரி கருணாகரன், குமரி அனந்தன், உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், ஆவணபட இயக்குனர் ஆபிரகாம்லிங்கன், இலங்கை வானொலி தொகுப்பாளர் அப்துல் ஹமீது,  நூலாசிரியர் டாக்டர் தமிழரசன், புத்தக பதிப்பாளர் பத்திரிக்கையாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள் ஆராய்ச்சி கட்டுரை வடிவில் ஆங்கிலத்தில் வெளியாகும் முதல் நூல் என்ற பெருமையை இந்த நூல் பெற்றிருக்கிறது.

420 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன