செந்தில்நாதன் இயக்கத்தில் யோகி, தேஜ், ஸ்வாதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “சிவி 2”. சிவி படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் இப்படம் எப்படியான கதையம்சத்தை கொண்டது என்பதை பார்த்துவிடலாம்.
துளசி சினி ஆர்ட்ஸ் சார்பில் லலிதா கஸ்தூரி கண்ணன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
கல்லூரி மாணவர்கள் சிலரை காணவில்லை என்று அவர்களது பெற்றோர்கள் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்கின்றனர். மாணவர்களை தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபடுகிறது.
அவர்கள் கடைசியாக சென்ற இடத்தில் கிடைத்த சில வீடியோ கேமராக்களைக் கைப்பற்றி, சாம்ஸிடம் அந்த வீடியோ கேமராக்குள் என்ன இருக்கிறது என்பதை பார்க்கச் சொல்லி கொடுக்கிறார் இன்ஸ்பெக்டர்.
சாம்ஸ் அந்த வீடியோவில் என்ன இருக்கிறது என்பதை பார்க்கிறார். அந்த வீடியோவிற்குள் என்ன இருந்தது.? மாணவர்கள் கிடைத்தார்களா.? என்பதை பயங்கர த்ரில்லர் கொண்டு இயக்கியிருக்கிறார் இயக்குனர் செந்தில்நாதன்.
படத்தில் நடித்த அனைவரும் கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்துள்ளனர்.. தனது மீட்டர் அறிந்து கதாபாத்திரத்திற்கு தேவையானதை மட்டும் கொடுத்திருக்கிறர்கள். க்ரிஷ் கதாபாத்திரத்தில் தோன்றிய தேஜ் படம் முழுக்க ஆக்கிரமித்து தனது கேரக்டரை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்.
சாம்ஸ் தனது அனுபவ நடிப்பை இதில் கொடுத்து தனது நடிப்பை சிறப்பு நடிப்பாக கொடுத்திருக்கிறார்.
முதல் பாதியில் சற்று விறுவிறுப்பு குறைவு என்றாலும், இரண்டாம் பாதியில் கதையில் வேகம் எடுத்து நம்மை சீட்டின் நுனியில் அமர வைத்திருக்கிறார் இயக்குனர் செந்தில்நாதன்.
விறுவிறுப்பான காட்சி நகர்வில், திரைக்கதையும் சற்று கூடவே பயணப்பட்டிருந்தால் படம் இன்னும் ஜோராகவே இருந்திருக்கும்.
சஞ்சய் அவர்களின் ஒளிப்பதிவு, மற்ற படங்களில் இருந்து சற்று வித்தியாசமான ஒளிப்பதிவு கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் தனித்துவமாக கொடுத்திருக்கிறார். ஃபைசல் அவர்களின் இசையில், பின்னணி இசை சற்று கவனிக்கத்தக்கது.
ஹாரர் படங்களை ரசிக்கும் ரசிகர்களை நிச்சயம் கவரும் இந்த “சிவி 2”..
இருந்தாலும், பேய் படங்களை ரசிக்க்கும் அனைவரும் நிச்சயம் ஒருமுறை பார்க்கும் படமாக அமைந்திருக்கிறது இந்த “சிவி 2”.
