வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

சொப்பண சுந்தரி – விமர்சனம்

இயக்குநர் எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் ‘சொப்பன சுந்தரி’. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் நடிகைகள் லஷ்மி பிரியா சந்திரமௌலி, தீபா சங்கர், நடிகர்கள் கருணாகரன், சுனில் ரெட்டி, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கதைப்படி,

ஏழ்மை குடும்பத்தைச் சார்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், ஒரு தனியார் நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். வாய் பேச இயலாத அக்கா (லக்‌ஷ்மி ப்ரியா), அம்மா (தீபா), பக்கவாதம் வந்து படுக்கையில் இருக்கும் தந்தை, குடும்பத்தை கவனிக்காமல் தனிக்குடித்தனம் சென்ற அண்ணன் (கருணாகரன்).. இதுதான் இவர்களது குடும்பம்.

குடும்பத்தின் மொத்த பாரமும் ஐஸ்வர்யா மீது இருக்க, இச்சமயத்தில் அதிர்ஷ்ட பரிசில் ஐஸ்வர்யாவிற்கு கார் கிடைக்கிறது. இந்த காரை வைத்து தனது அக்காவின் திருமணத்தை நடத்தி முடித்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த வேலையில், அந்த கார் தனக்கு வேண்டும் என்று கருணாகரன் வந்து நிற்கிறார்.

அந்த காரை வைத்து நடக்கும் விளையாட்டுகள் தான் “சொப்பண சுந்தரி”. இந்த கார் வந்ததற்குப் பிறகு இவர்களின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்தது என்பதது தான் படத்தின் மீதிக் கதை.

படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்டத்தை எவ்வித குறையும் இல்லாமல் கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள். வழக்கம் போல் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையினை தாங்கி நிற்கும் தூணாக நின்று அசத்தியிருக்கிறார்.

தீபா, லக்‌ஷ்மி ப்ரியா, கிங்க்ஸ்லி இவர்களின் காமெடிக் கூத்துகள் ரசிக்க வைத்திருக்கின்றன.

ஒரு சில படங்களின் சாயல் ஆங்காங்கே எட்டிப் பார்த்தாலும், அந்நேரத்தில் ரசிகர்களை ரசிக்க வைக்கும் திறமையை இயக்குனர் தெளிவாக கையாண்டிருக்கிறார்.

எதையும் எதிர்பார்க்காமல் திரையரங்கிற்குச் சென்று ரசித்தால், சொப்பண சுந்தரி உங்களை நிச்சயம் ஏமாற்றாது.

குழந்தைகளோடு சென்று பார்க்கலாம் என்று எண்ணும் போது, அந்த ஒரு இடத்தில் வரும் “அ….ஆ….” காட்சி பார்ப்பவர்களை சற்று முகச்சுழிவை ஏற்படுத்தலாம்.

மற்றபடி சொப்பண சுந்தரி – க்ளீன் எண்டர்டென்மெண்ட் படம்…

140 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன