செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

ஸ்ரீ சங்கரா டிவி “வெஜிடேரியனிசம்”

 

“வெஜிடேரியனிசம்”( சைவம்)

(திங்கள் முதல் வியாழன் வரை மாலை 8.30 மணிக்கு )

நல்ல உணவு என்பது நம் வாழ்க்கையின் முக்கிய அங்கமாகும், முன்பெல்லாம் நாம் வாழ்வதற்கு பிற உயிரினங்களை கொன்று உட்கொள்ளும் நிலை இருந்தது. ஆனால் ஸ்ரீ சங்கராவின் கருத்து  என்னவென்றால் தற்போதய வழக்கை முறைக்கு இது தேவையில்லை. இப்பொழுது  மக்களிடையே நிலவிவரும் கருத்து என்னவென்றால் முட்டை, மீன் ,இறைச்சி போன்றவற்றில் இருந்து கிடைக்கும் சத்துக்கள் அனைத்தும்  பச்சை தாவர உணவிலிருந்தும் கிடைக்கின்றது. சைவ உணவு பழக்கம் என்பது தாவரங்கள் மற்றும் தானியங்களில் இருந்து பெறப்படுவதாகும். எனவே தான் இக்கால மக்கள் இதனை உணர்ந்துகொண்டு சைவ உணவு பழக்கத்துக்கு மாறிவருகின்றன.

சைவ உணவு பழக்கத்தின் மூலமாக சாமானிய மனிதனுக்கு ஏற்படக்கூடிய உடல் உபாதைகளான உடல் பருமன், ரத்த அழுத்தம் , சர்க்கரை நோய், புற்று நோய் போன்றவற்றை தவிர்க்கலாம்.

எனவே தான்  சைவ உணவின் முக்கியத்துவத்தினையும் நமது பரம்பரியத்தினையும் உணர்த்துவதற்காக உங்கள் ஸ்ரீ சங்கரா டிவி பிரத்தியேகமாக ஏற்படுத்திய நிகழ்ச்சி தான் “வெஜிடேரியனிசம்” . இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வியாழன் வரை மாலை 8.30 மணிக்கு ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது .

257 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன