புதன்கிழமை, ஆகஸ்ட் 19
Shadow

ரகுமானின் ‘பகடி ஆட்டம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் பாண்டிராஜ்

ரகுமானின் ‘பகடி ஆட்டம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் பாண்டிராஜ்
நடிகர் ரகுமானின் அதிரடி ஆட்டம் ஆரம்பமாகி விட்டது. இவர் அடுத்ததாக ஆடும் ஆட்டம் ‘பகடி ஆட்டம்’.

மாறம் மூவீஸ் மற்றும் பரணி மூவீஸ் பெருமையுடன் வழங்கும் படம் ‘பகடி ஆட்டம்’. இப்படத்தை குமார் டி.எஸ், கே.ராமராஜ், டி.சுபாஷ் சந்திரபோஸ், ஏ.குணசேகர் ஆகியோர் தயாரித்து வருகிறார்கள். ராம் கே.சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார்.

வி.டி. நிறுவனம் இப்படத்தை உலகமெங்கும் வெளியிட இருக்கிறது.

இப்படம் குறித்து இயக்குனர் ராம் கே.சந்திரன் கூறும்போது, ‘எல்லா வசதியும் கொண்ட ஒரு ஆணுக்கும், அன்றாட வாழ்க்கையில் கஷ்டப்பட்டு வாழும் பெண்ணுக்கும் இடையேயான கதைதான் ‘பகடி ஆட்டம்’. மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில், சமூக வலைதளங்களில் மக்கள் அதிக ஆர்வம் காண்பித்து வருகின்றனர். இந்த சமூக வலைதளங்கள் எப்படி பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறேன். சமூக வலைதளம் மூலமாக பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை துப்பறிந்து வெளிச்சத்துக் கொண்டுவரும் கதாபாத்திரத்தில் ரகுமான் நடித்திருக்கிறார். குடும்பங்கள் ரசிக்கும் விதமாக இப்படத்தை இயக்கி இருக்கிறேன்’ என்றார்.

‘பகடி ஆட்டம்’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குனர் பாண்டிராஜ் தனது சமூக வலைதளத்தில் இன்று வெளியிட்டார். இளம் இயக்குனர்கள் இயக்கிய ‘உரியடி’, ‘மெட்ரோ’, துருவங்கள் 16’ ஆகிய வெற்றிபட வரிசையில் ‘பகடி ஆட்டம்’ படம் இருக்கும் என்று இயக்குனர் பாண்டிராஜ் கூறியுள்ளார். தற்போது இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர்கள், நடிகைகள்…..
ரகுமான், அகில், கௌரி நந்தா, நிழல்கள் ரவி, சுரேந்தர், மோனிகா, ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ, சுதா, சிசர் மனோகர், சுப்புராஜ், கோவை செந்தில், ‘சாட்டை’ ரவி, ‘பாய்ஸ்’ ராஜன்.

தொழில் நுட்ப கலைஞர்கள்…

இயக்குனர் : ராம் கே.சந்திரன்
இசை : கார்த்திக் ராஜா
ஒளிப்பதிவு : கிருஷ்ணசாமி
எடிட்டர் : கே.ஸ்ரீனிவாஸ்
பாடலாசிரியர் : கார்த்திக் ராஜா, விஜய் சாகர்
கலை : சண்முகம்
நடனம் : ராஜ்விமல்
தயாரிப்பாளர்கள்
குமார் டி.எஸ், கே.ராமராஜ்,
டி.சுபாஷ் சந்திரபோஸ், ஏ.குணசேகர்
வெளியீடு : V.T நிறுவனம்

548 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன