செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

எதிர்த்து குரல் கொடுத்த ஆர்யா நடிப்பில் சந்தனதேவன் பெயரில் ஜல்லிக்கட்டு கதை எடுக்கும் அமீர்

அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி…’ – அமீர் இயக்கும் சந்தனத் தேவன்! ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் தமிழகத்தில் உச்சத்தை எட்டியுள்ள சூழலில், தனது அடுத்த படத்தை ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இயக்கப் போவதாக அறிவித்துள்ளார் இயக்குநர் அமீர். இந்தப் படத்துக்கு சந்தனத் தேவன் என்று தலைப்பிட்டுள்ளார்.
தலைப்பை மென்மையாக வைத்து விட்டு கதையில் தீவிரத்தை காட்ட திட்டமிட்டிருக்கிறார் அமீர்.

இந்தப் படத்தில் இயக்குநர் அமீர், ஆர்யா, ஆர்யாவின் தம்பி சத்யா நாயகர்களாக நடிக்கிறார்கள்.
இந்த ஆர்யாதான் ஜல்லிக்கட்டுக்கு எதிரான பல கருத்துக்களை கூறியவர். இப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான படத்தில் ஹீரோவாக ஆர்யா நடிக்கிறார். வழக்கமாக அமீர் படங்களில் சர்ச்சைகளும், சலசலப்புகளும் ஏற்படுவது வழக்கம். இந்த சந்தனதேவன் பட கதையும் பல சர்ச்சைகளையும், சலசலப்புகளை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.

படத்தின் முதல் தோற்றப் போஸ்டரில் ஒரு ஜல்லிக்கட்டுக் காளையை ஆர்யாவும் சத்யாவும் அடக்குவது போன்ற படம் இடம்பெற்றுள்ளது. மேலும் அதில், “அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி, மண்ணை நேசி, மனிதனாக இரு…” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. படத்தை அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.
இதற்கான அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் வெளியே வரும் வாடிவாசல் போல செட் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு காளையையை வீரர் ஒருவர் திமில் பிடித்து அடக்குவது போலவும் ஜல்லிக்கட்டு மைதானம்போலவும் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.
ஜல்லிக்கட்டு விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அமீரின் இந்த அறிவிப்பு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

485 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன