வெள்ளிக்கிழமை, ஜூலை 3
Shadow

அப்பா,,மகன் இரட்டை வேஷத்தில் யோகிபாபு நடிக்கும் சித்தார்த்தின் “டக்கர்” 

 

அப்பா,,மகன் இரட்டை வேஷத்தில் யோகிபாபு நடிக்கும் சித்தார்த்தின் “டக்கர்”

தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக இருக்கும் நடிகர் சித்தார்த், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் தனது முதல் படமான பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார். அந்தவகையில் தற்போது நடிகர் சித்தார்த் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்திருக்கும் டக்கர் பட டீஸர் வெளியாகி உள்ளது

பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘டக்கர்’. நடிகர் சித்தார்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கி உள்ளார். சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். இப்படத்தில், அப்பா மகன் என இரண்டு ரோல்களில் கலக்கலாக நடித்திருக்கிறார் யோகிபாபு. திரையில் அப்பா, மகன் என இரு தோற்றங்களில் அவர் வரும்போது அரங்கம் அதிரும் என்கிறார் இயக்குநர்.

 

376 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன