ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

வியாபார தளமாக மாறிய  ICAF நடத்தும் 14 வது உலக திரைப்பட விழா !

 

சென்னையில்  ஆரம்பத்தில் பெரிய அளவில் விளம்பரதாரர்கள் இல்லாத சமயத்திலும், அரசின் உதவிகளும் இல்லாத நிலையிலும், ஆனந்த் திரையரங்கம், பைலட் திரையரங்கம், போன்ற இடங்களில் சிறப்பாக நடைபெற்று வந்தது, உலக திரைப்பட விழா !

படங்களின் தேர்வுகளும் பாராட்டலாம்.

டிசம்பர் இறுதியில் நடைபெற வேண்டிய நிகழ்வு புரட்சித் தலைவி மறைவாக தள்ளி வைத்து, தற்போது நடைபெற்று வருகிறது.

இதனால் தியேட்டர்கள் கிடைப்பதில் சில சிறமங்களை சந்தித்துள்ளதாக நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

அதே சமயத்தில், காசினே போன்ற திரையரங்குகளில் ( நிர்வாகப் பணிகள் உட்பட ) திரைப்பட விழா நடைபெறுவது வருத்தம் அளிக்கிறது.

வடபழனியில் உள்ள பலாசாவில் தினமும், பலர் அவமதிக்கப்படுகின்றனர். விழா குழுவினர் அதை ஒழுங்குபடுத்த வேண்டும்.

ஆர்.கே.வி ஸ்டுடியோஸ் ஆறுதல் என்றே சொல்லலாம், நன்றி.

இந்த முறை சரியான படங்களையும் தேர்வு செய்யவில்லை, குறைந்த அளவே நல்ல படங்களைப் பார்க்க முடிகிறது.

தற்போது விளம்பரதாரர்கள், மட்டுமின்றி படம் பார்பவர்களும் அதிகரித்து வருகின்றனர். அந்த வருமானம் மட்டுமே இவ்விழாவை நடத்த போதுமானதாக இருக்கும்.

இதில் இந்த திரைப்பட விழாவிற்கு, தமிழக அரசு 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது. இப்படி இருக்க இவ்விழாவை மிகவும் சிறப்பாக நடத்த முடியும்.

திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், கில்டு, ஃபெப்சி போன்ற அமைப்புகள் இருந்தும், ICAF எடுத்து வரும் முயற்சிகளை நாம் இதுவரை வரவேற்று வந்தோம்.

இதே நிலை தொடருமானால், இவர்களை அனைவரும் சேர்ந்து, புறக்கனைக்கப்படும் நிலை உருவாகும்.

அரசின் மூலம் அளிக்கப்படும் நிதியும் விவாதிக்கப்படும்.

உயர்திரு தங்கராஜ் சார், முரளி சார் போன்றவர்கள் கடந்து வந்த பாதையை மறக்காமல், படம் பார்பவர்களுக்கு மதிப்பளித்து, நல்ல படங்களைத் தேர்வு செய்து, தொடந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வேதனையுடன்

டி.எஸ்.ஆர.சுபாஷ்

365 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன