திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17
Shadow

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் ”கொம்பு வைச்ச சிங்கமடா” ஜல்லிக்கட்டின் பெருமைகளை உணர்த்தும் பாடல்

கொம்பு வைச்ச சிங்கமடா – ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் அருண்ராஜா காமராஜ்வரிகளில் ஜல்லிக்கட்டின் அருமைபெருமைகளை உணர்த்தும் பாடல்

ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு எதிராகஉலகெங்கும் உள்ள தமிழர்கள் பெருவாரியாக ஒன்றினைந்து தங்களின்ஒற்றுமையை ஜல்லிக்கட்டிற்கு தரும் ஆதரவின் மூலம் மீண்டும்நிருபித்துள்ளனர்.

மக்களுடன் இணைந்து பல சினிமா பிரபலங்களும் ஜல்லிக்கட்டிற்குஆதரவு அளித்து வருகின்றனர். ஆதரவளித்தவர்களில் மிகவும்முக்கியமானவர் நடிகர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்.

ஜல்லிக்கட்டு எங்கள் தமிழர் மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரியம், ஆகவேதடையை விளக்குங்கள் என்று உரக்க குரல் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்குமார், மேலும் தனது ஆதரவை வலுப்படுத்த ஜல்லிகட்டின் மகிமைமற்றும் தமிழருக்கும் ஜல்லிக்கட்டிற்க்குமான சொந்தத்தைஉணர்ச்சிப்பூர்வமாக கூறும் “கொம்பு வைச்ச சிங்கமடாஎனும் பாடலைஇசையமைத்து வெளியிட்டுள்ளார். அருண்ராஜா காமராஜ் இப்பாட்டிற்குவரிகள் எழுதியுள்ளார்.

ஐடியுன்ஸ், யு டுயுப் உள்ளிட்ட ஆன்லன் தளங்களில் வெளியானஇப்பாடல் ஈட்டும் வருமானம் அனைத்தும் உழவர்களுக்கு வழங்கப்படும்என்று அறிவித்துள்ளனர்.

545 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன