செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

நடிகர் சங்க அலுவலகத்தில் எம்.ஜி.ஆரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த தினம் இன்று தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்கமும் அவருடைய பிறந்தநாளை இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் வரும் நாட்களில் நடைபெறவிருக்கின்றனர்.

இந்நிலையில், எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு, தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் சரண்யா பொன்வண்ணன் மற்றும் சங்க உறுப்பினர்களான மனோபாலா, குட்டி பத்மினி, ராஜேஷ், பிரபு, சத்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதற்கு முன்னதாக, நடிகர் சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்கு சென்று, அவருடைய சமாதிக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது  குறிப்பிடத்தக்கது.

498 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன