செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

மலையக தமிழர்களால் மறக்க முடியாத மாபெரும் தலைவர் நூற்றாண்டு விழாவில் எம்ஜிஆருக்கு இலங்கை கல்வி அமைச்சர் புகழாரம்..!

மக்கள் திலகம், புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் நேற்று முதல் கொண்டாடி வருகிறார்கள். எம்ஜிஆர் தமிழகத்தை ஆட்சி செய்து மக்களின் மனசில் நீங்காத இடத்தை பிடித்தவர் என்றாலும் அவர் பிறந்த இடம் இலங்கை என்பதால் இலங்கையிலும் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இலங்கை கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் எம்ஜிஆரின் திருவுருவ படத்தை அமைச்சர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து பேசினார். எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்று வீடியோ திரையிடப்பட்டது. எம்ஜிஆரின் சாதனைகள் குறித்து பலர் பேசினார்கள்.


தமிழக அரசியல் தலைவர் ஒருவரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் அந்நிய தேசத்தில் ஒரு அமைச்சர் முன்னிலையில் நடப்பது எம்ஜிஆர் அவர்களுக்கு மட்டும்தான் என்பது குறிப்பிடித்தக்கது. மேலும், தமிழ் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட பிரபாகரனுக்கு பல்வேறு வகையில் கோடிக்கணக்கில் நிதி வழங்கியவர் எம்ஜிஆர் என்றால் அது மிகையில்லை.

எம்ஜிஆர் படத்தை திறந்து வைத்து கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

மக்கள் மனசில் மறையாமல் இன்னமும் வாழ்கிற தலைவர்களில் எம்ஜிஆர் ஒருவர். ஏழைகளின் வாழ்வில் சுபிட்சம் ஏற்படவேண்டும் என்றே தன் வாழ்நாள் முழுவதும் சித்தனையுடன் செயலாற்றிய ஒரே தலைவர் எம்ஜிஆர்தான். இலங்கையில் வாழும் தமிழர்களின் பிரச்னையில் தீர்வு கிடைக்கவேண்டும் என்றும், அவர்களின் நலனிலும் அக்கறையோடு இருந்த ஒரே தலைவர் உண்டு என்றால் அது முன்னாள் தமிழக முதல்வரும், நடிகரும், தயாரிப்பாளருமான எம்ஜிஆர்தான். இறந்த பிறகும் ஒரு தலைவனை 30 ஆண்டுகளாக நினைவில் வைத்திருக்கிறார்கள் என்றால் அது எம்ஜிஆர் ஒருவராகத்தான் இருக்க முடியும்.

மலையக மக்களால் எப்போதும் மறக்க முடியாத தலைவராக இருக்கிறார் எம்ஜிஆர். இப்போதும் மலையக தேர்தல் நேரங்களில் அவரின் பாடல்கள்தான் ஒலிபரப்புகிறார்கள். இன்று எத்தனையோ பாடல்கள் வந்து விட்டாலும் எம்ஜிஆர் காலத்தில் ஒலித்த பாடல்களிலும், திரைப்படங்களிலும் மக்களை மையப்படுத்தி அவர்களின் நலனின் அக்கறையோடு எல்லாம் இடம் பிடித்திருக்கும். அதை நடிப்பிற்காக மட்டும் பயன்படுத்தாமல் நிஜ வாழ்வலும் செய்து காட்டிய மாபெரும் தலைவர் எம்ஜிஆர் என்று இலங்கை கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார்.

444 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன