சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

தமிழர்களின் உதிர்ந்த ரோமத்துக்கு சமம் நீ..! பீட்டா நிர்வாகிக்கு ஆவண பட இயக்குனர் கடும் கண்டனம்

தமிழர்களின் உதிர்ந்த ரோமத்துக்கு சமம் நீ..!

பீட்டா நிர்வாகிக்கு ஆவண பட இயக்குனர் கடும் கண்டனம்

இது குறித்து ஆவண பட இயக்குனர் ஆபிரகாம் லிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உலகின் தொன்மையான மொழியான தமிழ் மொழியின் மீதும், தமிழர்களின் பாரம்பரியத்தின் மீதும் காலம் காலமாக தொடுக்கப்பட்டு வரும் மறைமுக அடக்குமுறைகளில் ஒன்றாக இதுவரை இருந்த வந்த அந்நிய சக்திகள் இப்போது அதி தீவிரமாக களத்தில் இறங்கியிருப்பதால் தமிழ் பாரம்பரியத்தை மீட்கவும், காப்பாற்றவும் தமிழர்கள் நேரடியாக களத்தில் இறங்கி போராட தொடங்கியிருக்கிறார்கள்.
மாணவர்கள் போராட்டம் எப்போதும் தோற்றதில்லை. தமிழ் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய கையாலாகாத அரசாக மத்திய அரசும், மாநில அரசும் செயல்படுகிறது. தமிழர்கள் மீதான அடக்குமுறையை சத்தமில்லாமல் மத்திய அரசு செய்து வருவது இந்த விவகாரத்தில் வெட்டவெளிச்சமாகியிருக்கிறது.
மத்தியில் ஆளும் பாஜ அரசில் உள்ள அமைச்சர்களுக்குள்ளேயே ஒருமித்த கருத்து இல்லை. அதன் தலைவர்களும் ஆளாளுக்கு ஒரு கருத்தை ஜல்லிக்கட்டு தடை விவகாரத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
தடைக்கு காரணமான பீட்டா நிர்வாகிகளை சந்திக்கிற பிரதமர் மோடி, தமிழக பிரதிநிதிகளை சந்தித்த மறுக்கிறார். பாஜவின் இரட்டை வேஷம் வெளிச்சத்திற்கு வந்துவிட்ட நிலையில், தமிழகத்தில் எழுந்துள்ள மாணவர்களின் வீரியமிக்க அறப்போராட்டத்தை நீர்த்துப்போக செய்யும் வழிகளை தேடத் தொடங்கியிருக்கிறார்கள். இதன் ஒருபகுதி அறப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆத்திரமூட்டும் செயல்களை செய்ய சத்தமில்லாமல் வேலைகள் நடந்து வருகிறதாக தெரிகிறது.


மாநிலம் முழுவதும் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோழர்கள், மாணவர்கள், அமைப்பு சார்ந்தவர்கள், பெண்கள், ஆண்கள் அனைவருமே கட்டுக்கோப்பாக எடுத்த நோக்கத்தில் தீவிரமாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும் எண்ணமும்.
தமிழகம் முழுவதும் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தி பல இடங்களில் ஆயிரக்கணக்கில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் அந்த அறப்போராட்டக்காரர்களுக்கு கொந்தளிப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தும் வகையில் பீட்டா அமைப்பின் நிர்வாகியான பூர்வாவிடம் ஒரு ஆங்கில இதழ் பேட்டி கேட்டு பிரசுரித்திருக்கிறது. அதில் தமிழர்கள் ஜல்லிக்கட்டு நடத்தவே முடியாது என்று சவால் விடுவதாக அந்த இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதையும் ஓருவிதமான தாக்குதலாக கருத வேண்டும். ஆவேசமாக இருக்கிற மாணவர்களிடம் இதுபோன்ற தேவையற்ற கருத்துக்களை திணித்து அவர்களை ஆவேசமாக்கி வன்முறையில் இறக்கிவிடவும், போராட்டத்தை நீர்த்துப்போக செய்யவும் இதுபோன்ற விஷயங்களில் விஷத்தை பரப்பும் வேலையில் அந்த இதழ் இறங்கியிருப்பதாக தெரிகிறது.
அந்த பீட்டா நிர்வாகி பூர்வாவுக்கு தமிழர்களின் பாரம்பரியத்தை பற்றி பேசவோ, தமிழர்களின் கலாச்சாரத்தை பற்றி கருத்து சொல்லவோ எந்த அருகதையும் இல்லை. தமிழர்களின் உதிர்ந்த ரோமத்திற்கு ஒப்பானவர்தான் இந்த பீட்டா நிர்வாகி பூர்வா. இந்த பீட்டாவுக்கு ஆதரவாக யார் களத்தில் கருத்து சொன்னாலும் அவர்களும் தமிழர்களின் உதிர்ந்த ரோமத்திற்கு சமமானவர்கள் என்றும், தமிழர்களின் கலாச்சாரத்தைதோடு விளையாடிய யாரும் வென்றதாக சரித்திரம் இல்லை. உலகில் வெற்றி பெற்ற பல சரித்திர சம்பவங்களை திருப்பி பாருங்கள் அதில் தமிழர்களின் பங்கும், பங்களிப்பும் அளப்பரிய அளவில் இருந்திருக்கும். இந்த ஜல்லிக்கட்டு விஷயத்திலும் தமிழர்கள் தங்கள் தன்மானத்தை திரும்ப பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு ஆவண பட இயக்குனர் ஆபிரகாம்லிங்கன் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.

296 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன