ஜல்லிக்கட்டு வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் – நடிகர் சூர்யா
இதுபற்றி திருவனந்த புரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் சூர்யா கூறியதாவது:-
தமிழ்நாட்டில் ஜல்லிக் கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்வில் ஒரு மாணவர் காப்பி அடித்தார் என்பதற்காக தேர்வு முறையையே ரத்து செய்வது போல இது உள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்தும் போராட்டம் எழுச்சி மிக்கதாக உள்ளது. அவர்கள் தாமாகவே வந்து போராட்டம் நடத்துவது பெருமையாக உள்ளது. இந்த போராட்டத்தில் உண்மை உள்ளது. ஜல்லிக்கட்டு வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
தற்போது எங்கும் ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றியே பேசப்படும் அளவுக்கு ஆதரவு பெருகி உள்ளது. இவ்வாறு சூர்யா கூறினார்.
492 Views
