செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

தில் ஆக சமூகத்துக்கு தீர்வு சொல்லும் வீரத்தேவன் – விமர்சனம்


ஒத்த வார்த்தை உசுர அறுக்கும்ணு ஊர்ல ஒரு பழமொழி இருக்கு… அப்படி அப்பா சொன்ன ஒரு வார்த்தையால ஒரு உசுரு போக காரணமான நண்பனின் வலி மிகுந்த கதைதான் வீரத்தேவன்.

இதுக்கெல்லாம் ஒரு தில்லு வேணும்னு சொல்லுவாங்களே அந்த தில் முதல் படத்துலயே அறிமுக ஹீரோ கவுஷிக் கோபாலனுக்கும், வில்லனா நடித்திருக்கும் ஹீரோவின் நிஜ அப்பா கோபாலனுக்கும் ரொம்பவே இருக்கு.

பையன் அறிமுகம் ஆகும் முத படத்துல முத சீனே ஹீரோவ உசுரா பழகின நண்பனே கரகரன்னு கழுத்தறுத்து கொன்னா… நெனச்சி பாக்கவே அடிவயிரு பகீர்னு இருக்கில்ல… இப்படித்தான் தொடங்குது வீரத்தேவன்…
படத்தோட பேருக்கேத்த மாதிரியே பட ஆரம்பமே தேவர் ஜெயந்தியில போடுற ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மாதிரி ஒரு பாட்டு வச்சி அங்கிட்டு இங்கிட்டு நகர விடாம சீட்ல உக்கார வைக்கும் இயக்குனர்.
முதல் படம்னு எந்த டென்ஷனும் இல்லாம அடிச்சி ஆடுற ஹீரோ கவுஷிக் கோபாலன்.
நல்லவனா வில்லனான்னு கண்டுபிடிக்க முடியாத கோபாலன்… கரடு முரடா இருந்தாலும் பொறப்பு பத்தி அப்பா சொன்ன ஒத்த வார்த்தயால பாசமா பழகின நண்பனையே கொன்னு டெரர் நடிகரா அடையாளப்பட்டுக்கொண்ட இயக்குனர் வீரன் செல்வராசு.


பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரியே ரொம்ப இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய மீனலோட்சனி இவர்களை சுற்றி நடந்த கதைதான் வீரத்தேவன்.

அன்பான அண்ணன்கள் ஒரே தங்கையான ஹீரோரோயின் வழக்கம்போல ஹீரோ கவுஷிக்குக்கு ஹீரோயின் மீனலோச்சனி மேல காதல்…
ஹீரோயின் அண்ணன்கள் ஊர்ல பெரிய ஆட்கள் பல காதல் கல்யாணங்களையும் ஹீரோயின் அண்ணன் கோபாலன் செய்து வைக்கிறார்.
ஆனால் இவர்கள் காதலை அவர்கள் ஏற்கவில்லை.
நண்பனின் காதலை சேர்த்து ஹீரோவின் நண்பன் வைக்க இயக்குனர் வீரன் செல்வராசு தாலி எடுத்து கொடுக்க காதலியை கரம் பிடிக்கிறார் ஹீரோ.
தங்கை கழுத்தில் தாலி ஏறிவிட்டதால் கோவக்கார அண்ணன்கள் அமைதியாக சென்று விடுகிறார்.
காதல் ஜோடி மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையில் நுழைய முயற்சிக்கும் போது உயிர் நண்பனாக இருந்த வீரன் செல்வராசு ஹீரோவின் கழுத்தை அறுத்து கொலை செய்கிறார்.


எதற்காக நண்பனான ஹீரோவை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்கிறார் வீரன்?
பாசமான தங்கை வாழ்க்கையை அழித்த வீரனை ஹீரோயின் அண்ணன்கள் என்ன செய்தார்கள்?
ஹீரோயின் நிலை என்ன? என்பதுதான் வீரத்தேவன் கிளைமாக்ஸ்.
அறிமுக படத்திலேயே ஒரு ஹீரோவை முதல் காட்சியிலேயே கழுத்தை அறுத்து கொல்லும் கொடூர சீனை வைத்த இயக்குனர் வீரன் செல்வராசுவுக்கும், அதை ஏற்று நடித்த ஹீரோ கவுஷிக் கோபாலனுக்கும் வீரத்தேவன் பட பெயரைப்போலவே தில் கொஞ்சம் அதிகம்தான்.


வீரத்தேவன் என்ற டைட்டிலுக்கு மிக பொறுத்தமாக கிளைமாக்ஸ் வைத்து பலகோடி தேவர் சமூக மக்களுக்கு மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தியிருக்கிறார். அதிலும் குறிப்பாக கிளைமாக்ஸ் ஒரு ஹீரோயின் மீது நிற்க வைத்ததற்காக இயக்குனர் வீரனுக்கு சபாஷ் சொல்லலாம்.
இன்றை சமூகத்திற்கு அதிலும் குறிப்பாக கலப்பு திருமணம் செய்கிறவர்களுக்கு மிக அழகாக ஒரு செய்தி சொல்லியிருக்கிறார் இயக்குனர் வீரன்.
வன்முறைக்கு வன்முறையல்ல தீர்வு என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் படக்குழுவுக்கு பெரிய சல்யூட்…
படத்தில் பல குறைகள் இருந்தாலும் அவர்கள் சொல்ல வந்த கருத்து இன்றைய சமூகத்திற்கு தேவையானது என்பதால் குறைகள் மறக்கப்படலாம்.
தர்மபிரகாஷ் இசையிலும் பல இடங்களில் வீரமும்… சில இடங்களில் கண்களில் ஈரமும் நிச்சயம்.
வீரத்தேவன் பெயருக்கேற்றார்போல கம்பீரமான கதைக்கருவை சுமந்தவன். வன்முறை வாழ்க்கையின் தீர்வாகாது என நெற்றிப்பொட்டில் ஓங்கி கொட்டும் வீரத்தேவன் வரவேற்க வேண்டியவன்.

– கோடங்கி

547 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன