செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

காதல், வாழ்வியல்,  உளவியல் அரசியலையும்பேசும்  பரியேறும் பெருமாள்

இயக்குநர் பா.இரஞ்சித்தின் படத்தயாரிப்பு நிறுவனமான “நீலம்புரொடக்‌சன்ஸ்” தயாரித்திருக்கும் படம் “பரியேறும் பெருமாள்.  இயக்குநர் ராம்-ன் இணை இயக்குநரான மாரிசெல்வராஜ், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

”தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்” என்ற சிறுகதை தொகுப்பின்மூலமாகவும் “மறக்கவே நினைக்கிறேன்”தொடரின்  மூலமாகவும் இலக்கியஉலகத்திலும் பரவலாக  அறியப்பட்ட எழுத்தாளரான மாரி செல்வராஜ்இயக்கும் முதல் திரைப்படம் “பரியேறும் பெருமாள்”.

முழுக்க முழுக்க தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்டதென்மாவட்டங்களில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் தென் தமிழககிராமங்களிலும் நகரங்களிலும் பள்ளி, கல்லூரிகளிலும் எளிய மக்களிடமும் நுணுக்கமாக பரவிக்கொண்டிருக்கும் பிரிவினை படிநிலைகளையும் அதுஉருவாக்கும் பெரும்  தாக்கத்தையும் பற்றி உண்மைக்கு மிக அருகில்  சென்றுபேசுகிற படமாக இப்படம்  உருவாக்கப்பட்டிருக்கிறது. காதலையும்வாழ்வியலையும் அதனைச் சுற்றி  நடைபெறும் உளவியல் அரசியலையும்பேசும் படமாக பரியேறும் பெருமாள் இருக்கும். 

பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர்நடிக்க அவருடன் கயல் ஆனந்தி, யோகிபாபு, லிஜீஷ், மாரிமுத்து தவிரதிருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மக்களையே பெரும்பான்மையானகதாபாத்திரங்களில் நடிக்க வைத்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, விவேக் மற்றும் மாரி செல்வராஜ்இருவரும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவாளராகவும்,ஆர்.கே.செல்வா எடிட்டராகவும் பணியாற்றியிருக்கிறார்கள். சான்டி நடனம் அமைக்க, சண்டைப்பயிற்சியை ஸ்டன்னர் சாம் அமைத்திருக்கிறார். சி.வேலன் மற்றும் ஆர்.ராகேஷ் இணைந்து தயாரித்துள்ளனர். 

படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், வெளியீட்டிற்கு வேகமாகத் தயாராகிவருகிறது, “பரியேறும் பெருமாள்”.

370 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன