செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

அழைத்த நகைச்சுவை மறுத்த மக்கள் நாயகன்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா – கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் தானாசேர்ந்த கூட்டம் வேகமாக வளர்ந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது.

இத்திரைப்படத்தில் நடித்து வரும் நகைச்சுவை நடிகர் ஒருவர் இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடிக்க மக்கள் நாயகனை இயக்குனர் மற்றும் ஹீரோவின் சம்மதத்துடன் அணுகியுள்ளார். ஆனால் மக்கள் நாயகன் நடிக்க மறுத்துவிட்டார் கதாநாயகனாக 50ஐ பூர்திசெய்யாமல் மற்ற கதாபாத்திரங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். இவர் ஏற்கெனவே ராவணன் திரைப்படத்தில் இளையதிலகம் ஏற்றிருந்த கதாபாத்திரத்தில் அழைத்தபோதும் இதே போன்று தவிர்த்து விட்டார்.

மக்கள் நாயகன் இதுவரை நடித்துள்ள எந்த ஒரு படத்தின் தலைப்பும் அதற்க்கு முந்தைய தமிழ் படங்களின் தலைப்பை வைத்ததில்லை

ஒன்று மட்டும் நிச்சயம் இன்றளவிலும் மக்கள் நாயகனுக்கு ரசிகர் கூட்டம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.இப்பொழுதும் ரசிகர்கள் பலர் பல ஊர்களிலிருந்தும் வந்து பார்த்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் நாயகன் மேலும் காலம் தாழ்த்தாமல் நல்ல வாய்ப்பினை ஏற்று ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை பெறுவார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை

326 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன