செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

மக்களை ஏமாற்றி தயாரிப்பாளர்களின் கோவணத்தை உருவும் முன்னணி நடிகர்கள் வெளுத்து வாங்கும் தயாரிப்பாளர்

 

தமிழ் சினிமாவில் சமீப காலமாக திருட்டு கதைகள் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், பட வெற்றி விழாக்களும் போலியாக மக்களை ஏமாற்றுவதற்காக தயாரிப்பாளர்களை நஷ்டத்தில் தள்ளி நடிகர்களின் விளம்பரத்திற்காக நடத்தப்படுகிற விழ £க்கள் என்று பகீர் உண்மையை தயாரிப்பாளர் ஒருவர் வெளிப்படுத்தியிருப்பதால் தமிழ் சினிமாவில் பல வெற்றி விழாக்களின் பே £லித்தனம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
இது குறித்து தயாரிப்பாளர் திருப்பூர் சுப்பிரமணியம் என்பவர் வாட்ஸ் அப் குரல் மூலம் வெளியிட்டிருக்கும் ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழ் சினிமாவில் பணம்போட்டு படம் தயாரிக்கிற தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் எல்லாருமே பெருத்த நஷ்டத்தில்தான் இருக்கிறார்கள். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இதுதான் நிலைமை. ஆனால், இதை மறைத்து விட்டு படம் ரிலீஸ் ஆன இரண்ட £வது நாளே வெற்றி விழா கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயம். அந்த வெற்றிவிழாவை 5 ஸ்டார் ஓட்டல்ல கொண்டா டுகிறீர்கள். அதற்கும் தயாரிப்பாளர்தான் பில் செட்டில் செய்கிறார். எந்த தைரியத்தில் வெற்றி விழா கொண்டாடுகிறீர்கள். உங்களு க்கெல்லாம் மனசாட்சி இருக்கிறதா. கபாலி ரிலீஸ் ஆனதில் இருந்து வைத்துக் கொள்ளுவோம். அதன்பிறகு தீபாவளிக்கு வந்த க £ஷ்மோரா, கொடி, தொடரி, போகன், பைரவா, கத்தி சண்டை, இப்ப ரிலீஸ் ஆன சி.3 எல்லாத்தையும் சேர்த்துதான் சொல்றேன்… படம் ரிலீஸ் ஆனதும் மாபெரும் வெற்றி, மக்கள் விரும்பும் வெற்றி, மகிழ்ச்சி, 25வது நாள், 50வது நாள், 200வது நாள்னு விளம்பரம் போடுறீங்களே உண்மையிலேயே தியேட்டர்ல ஓடித்தான் விளம்பரம் போடுறீங்களா. மனசாட்சியோட விளம்பரம் குடுக்கணும். மக்களை வேணா விளம்பரம் போட்டு ஏமாத்தலாம். தொழில்ல இருக்கிற எங்களுக்கு தெரியும் எவ்ளோ நஷ்டம்னு. சொன்ன இத்தனை படத்துலயும் ஒரு வினியோகஸ்தர்கள் கூட சம்பாதிக்கல. அப்புறம் எதை வைச்சி வெற்றின்னு சொல்றீங்க.
இடையில ஒண்ண விட்டுட்டேன்… ரெமோ… இரண்டு ஏரியாவை தவிர மத்த எல்லா ஏரியாவிலும் ரெமோ நஷ்டம்தான்.
மக்கள் திலகம், மக்கள் நாயகன், நான்தான் அடுத்த எம்ஜிஆர்னு சொல்லிக்கிற நடிகர்கள் எல்லாருமே அவர்கள் சினிமாவுல பின்பற்றிய நடைமுறைகளை பின்பற்றி தொழில் பண்றீங்களா.
எம்ஜிஆர் ஒரு படம் ரிலீஸ் பண்ணா வாங்குன வினியோகஸ்தர்கள் தொடங்கி தியேட்டர்ல தட்டை முறுக்கு விக்கறவங்களுக்கு கூட லாபம் வந்துச்சான்னு கேட்டு திருப்தியான பதில் வந்தாதான் அடுத்த படத்துக்கு போவாராம். ஒருவேளை பதில் திருப்தி இல்லனா தேவர் பிலிம்ஸ்ல கதை அடுத்த கதையை ரெடி பண்ண சொல்லுவாராம். கதைய தயாரிப்பாளர்கிட்ட ரெடி பண்ண சொல்லியிரு க்கார் எம்ஜிஆர். அதனாலதான் கடந்த 50 வருஷமா சினிமா தொழில் நல்லாயிருந்துச்சி… கடந்த 10 வருஷமா தமிழ் சினிமா மரண படுக்கைக்கு போனதுக்கு காரணம் இந்த மாதிரி நடிகர்கள்தான்.

மேலே சொன்ன நடிகர்கள் படத்தை ரிலீஸ் பண்ண வினியோகஸ்தர்களை கூப்பிட்டு என்னிக்காவது பேசியிருக்கீங்களா. என் படத்தை வாங்கினீங்க லாபம் வந்துச்சா என்ன கலெக்ஷன் ஆச்சின்னு என்னிக்காவது கேட்டிருக்கீங்களா… படம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் சனிக்கிழமை வெற்றி விழா கொண்டாடுறீங்க… தயாரிப்பாளர் செலவுல. டெக்னீஷியன்களுக்கு தங்கச்சங்கிலி போடுறேன்னு சொல்றீங்க. இன்னொரு நடிகர் டைரக்டருக்கு கார் வாங்கித் தர்றாரு. சார் உண்மையிலயே உங்க படத்தை எடுத்ததால வினியே £கஸ்தர் அவர் வைச்சிகிட்டிருந்த காரை வித்துகிட்டிருக்காரு அது உங்களுக்கு தெரியுமா. தமிழ்நாட்டுல இருக்குற 900 தியேட்டர்ல இல்ல இருக்குற வினியோஸ்தர்கள் கிட்ட கேளுங்க… இல்ல உங்க படத்தை ரிலீஸ் செய்யும் 600 தியேட்டர்ல உண்மையான வசூல் கேளுங்க. சிலர் பண்ற தப்பு படம் பெரிய வெற்றி பெற்று விட்டதுன்னு நடிகர்கிட்ட பொய்யா சொல்லி அவரோட அடுத்த படத்துக்கு தேதி வாங்கி படம் பண்ண ஏன் இப்படி பொய் பேசுறீங்க. உண்மையான வசூல் நிலவரம் அந்த நடிகர்களுக்கு தெரியுமா.
நிஜமாவே முன்னணி நடிகர்கள் என்று சொல்லும் இவர்களின் நிஜ வசூல் நிலவரம் தெரிஞ்சாதான் படம் எடுக்கிற எல்லார் கஷ்டமும் அவர்களுக்கு தெரியும். அப்பத்தான் நாமா வாங்குற சம்பளம் நியாயம்தானா, விக்கிற விலை சரிதானான்னு தெரியும்.
எனக்கு தெரிஞ்ச வரை இனி எல்லா நடிகர்களுக்கும் படத்தை நீங்களே வெளியிடுங்க. உண்மையான வசூல் நிலவரத்தை தெரிஞ் சிகிங்க. கபாலி வசூல் உண்மையான நிலவரம் ரஜினிக்கு சொல்லப்பட்டதா தாணு சார் அதை செய்தாரான்னு தெரியாது. எங்க சங்கம் எந்த நடிகருக்கும் ரெட் கார்டு எதையும் போடாது. வினியோகஸ்தர்கள் புத்தியா நடந்துக்கவேண்டியதுதான்.
நடிகர்கள் நேரடியாக சொந்த செலவில் படத்தை ரிலீஸ் செய்து அவர்களின் மார்க்கெட் நிலவரத்தை தெரிஞ்சிக்கட்டும்.


அதோடு, இப்ப பல நடிகர்கள் அரசியல் பேசுறேன்னு எதையாவது சொல்லிகிட்டிருக்காங்க. நான் முதல்வரை பாக்க போறேன்னு. பிரதமரை பாக்க போறேன்னு சொல்லிகிட்டிருக்கிறது எந்த விதத்தில் சரி.
என் படம் ரிலீஸ் ஆகும்போது 100 ரூபாய்க்கு மேல் யாரும் டிக்கெட் விற்க கூடாதுன்னு ஒரு அறிக்கை விட முடியுமா. படம் வரும்போது 500 ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் விற்கும்போது கை தட்டி ரசிக்கிறீங்க ஏன். டிக்கெட் விலையை ஒரே மாதிரி வைக்க என்னிக்காவது நடிகர்கள் முயற்சி எடுத்திருக்கீங்களா.
தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் என 3 பிரிவினர்தான் சினிமாவில் பணம் போடுகிறவர்கள் அவர்களை அழைத்து என்னிக்காவது இந்த நடிகர்கள் பேசியிருக்கிறீர்களா? பணம் கொடுத்து வாங்கும் நிலையில் இப்போது எந்த வினியே £கஸ்தர்களும் இல்லை காரணம் கடைசி கோவணம்வரை உருவி விட்டார்களே இனி எப்படி நாங்கள் பணம் கொடுத்து படம் வ £ங்குவது என்று வினியோகஸ்தர்கள் கண்ணீர் விடுகிறார்கள். பொய்யான வெற்றி தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை ஏமாற்ற வேண்டாம். உண்மையான நிலையை தெரிந்து கொண்டு தொழில் செய்தால் எல்லாருக்குமே நன்மையாக இருக்கும் என்று பட்ட £சாக வெடித்து தள்ளியிருக்கிறார் தயாரிப்பாளர் திருப்பூர் சுப்பிரமணியம்.
இது தொடர்பாக வாட்ஸ்அப் மூலம் குரல் பதிவில்தான் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் விஜய், அஜீத், சூர்யா, விஷால், தனுஷ், சிவக £ர்த்திகேயன், கார்த்தி ஆகியோரின் சமீபத்திய வெற்றி விழாக்கள் எல்லாம் மக்களை ஏமாற்றிய பொய் வெற்றி விழா என்பது அவர்கள் துறையை சேர்ந்த ஒரு தயாரிப்பாளரே பகிரங்கப்படுத்தியிருப்பது தமிழ் சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியிருக்கிறது.
மேலும், இந்த நடிகர்களின் படங்களை இனி வினியோகஸ்தர்கள் வாங்குவதற்கு தயாராக இல்லை என்றும் சொந்த காசில் ரிலீஸ் செய்ய வேண்டிய நிலைக்கு நடிகர்கள் தள்ளப்பட்டிருப்பதையும் இந்த தகவல் உறுதிபடுத்துகிறது.

439 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன